Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி பாலேந்திரனை, அவரது மகள் விபூசிகா பாலேந்திரன் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிகிறது.

விபூசிகா தன்னுடைய தாயாரைச் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கரைச்சி பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி விஜயகுமாரி சுரேஸுடன் சென்று விபூசிகா தன்னுடைய தாயாரைச் சந்தித்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் மார்ச் 13ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து, சந்தேகநபர் ஒருவருக்கு ஒளிந்திருக்க இடம் வழங்கியதாக குற்றஞ்சாட்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரி பாலேந்திரனும், விபூசிகா பாலேந்திரனும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இருவரும், மார்ச் 14ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன் பிரகாரம், தாயாரான ஜெயக்குமாரி பாலேந்திரனுக்கு 3 மாதகாலம் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். விபூசிகா பாலேந்திரன், மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயை, சிறுமி விபூசிகா சந்தித்தார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com