சர்வதேசத்தின் சதித் திட்டங்களுக்கு இணங்கிப் போவதும், நாட்டுக்கு எதிராகச் செயற்படுவோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் செயற்படுவதும் தேசத்துரோகமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலக குடும்ப சுகாதார உத்தியோகத்தர் தினத்தையொட்டி பெந்தர பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைக்கவும். அரசாங்கத்தை வீழ்த்தவும் சர்வதேச நாடுகளில் இருந்து சில சக்திகள் செயற்படுகின்றன. இது தொடர்பில் அனைவரும் கவனத்துடன் செயற்படுவது முக்கியம். அரச வளங்களை விற்று நாட்டை வீழ்ச்சியுறச் செய்த அரசாங்கங்கள் போலன்றி, விற்றதை மீட்டு பாதுகாத்த அரசாங்கம் இது. எனவே, அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது அவசியமாகும். வரப்பிரசாதங்கள் வழங்கும் அரசை வீழ்த்திவிட்டு வேறு வழியில் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள நினைப்பது நல்லதல்ல என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to சர்வதேசத்தின் சதித் திட்டங்களுக்கு இணங்கிப் போவது தேசத்துரோகமாகும்: மஹிந்த ராஜபக்ஷ