Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசு பதக்கம் அணுவாயுதப் பரவலைத் தடுக்கப் போராடி வரும் தன்னார்வ அமைப்பான ICAN இன் இயக்குனர் ஃபியாட்ரிஸ் ஃபின் என்பவருக்கு வழங்கப் பட்டது.

இப்பரிசுக்கான சான்றிதழ் ஜப்பானின் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் தப்பித்த செட்சுகோ தர்லோ என்பவருக்கு வழங்கப் பட்டது. ஒஸ்லோவில் நடைபெற்ற இவ்விழாவில் நோர்வேயின் நோபல் பரிசுக் குழுத் தலைவரான பெரிட் ரைஸ் ஆண்டர்சன் என்பவர் பரிசுகளை வழங்கினார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரைத் தளமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச அணுவாயுதத் தடை இயக்கமான ICAN இல் 101 நாடுகளைச் சேர்ந்த 468 தன்னார்வ அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் ICAN அமைப்பால் மேற்கொள்ளப் பட்ட அணுவாயுதத் தடை ஒப்பந்தம் ஒன்றில் 122 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. ஆனால் அமெரிக்கா உட்பட உலகின் முக்கிய அணுவல்லரசு நாடுகள் சில இதில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமைதிக்கான நோபல் பரிசு ICAN இயக்குனர் ஃபியாட்ரிஸ் ஃபின் இற்கு வழங்கப் பட்டது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com