அமெரிக்காவின் முதல் பெண்மணியும் அதிபர் ஒபாமாவின் மனைவியுமான மிச்சேலே ஒபாமா நைஜீரியாவில் கடத்தப் பட்ட 200 இற்கும் அதிகமான மாணவிகளை விடுவிக்க மிக அரிதான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதாவது இவ்விவகாரத்தில் தனது கோபத்தை அதிபர் ஒபாமாவின் வாராந்த ரேடியோவில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தனது செய்தியில், 'நைஜீரியாவில் 200 மாணவிகளை நள்ளிரவில் கடத்திய சம்பவத்துக்கு உலகிலுள்ள மில்லியன் கணக்கான மக்கள் எவ்வாறு கொதிப்படைந்து உள்ளனரோ அதற்கு இணையாக நானும் எனது கணவரும் மனமுடைந்து இவ்விடயத்தில் ஆத்திரமுற்றுள்ளோம்! அறிவுடைய மனித சமூகம் செய்வதற்குக் கூசும் இத்தகைய காரியத்தினைச் செய்து பெண் சிறுமிகளின் கல்விக்கு ஊறு விளைவித்து வரும் தீவிரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்!' என்றுள்ளார்.
நைஜீரிய அதிபர் குட்லுக் ஜொனாதன் வெள்ளிக்கிழமை தகவல் அளிக்கையில் நைஜீரியத் தீவிரவாதிகளான போக்கோ ஹராம் தாம் கடத்திய பள்ளி மாணவிகளை இன்னமும் எமது நாட்டிலேயே மறைத்து வைத்திருப்பதாகத் தாம் நம்புவதாகக் கூறியுள்ளார். கமெரூன் எல்லையிலுள்ள சிபோக் கிராமத்தில் இருந்து ஏப்பிரல் 14 ஆம் திகதி கடத்தப் பட்ட இப்பள்ளி மாணவிகள் அச்சமயத்தில் பரீட்சையை எதிர்நோக்கி இருந்தனர். கடத்தப் பட்டவர்களில் 50 மாணவிகள் எப்படியோ தப்பித்து வந்த போதும் இன்னும் 200 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் கடத்தப் பட்ட மாணவிகளை விடுவிப்பதில் அரசு காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அமெரிக்க அரசு இவ்விடயத்தில் உதவுவதற்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இதேவேளை அதிபர் ஒபாமாவின் துணைவியார் மிச்சேலே கடத்தப் பட்ட மாணவிகளைத் தமது சொந்த மகள்களைப் போன்றே தாம் பாவிப்பதாகவும் இம்மாணவிகளின் பெற்றோரின் உணர்வுகளைத் தன்னால் புரிந்து கொள்ள முடிவதாகவும் இவர்களைக் கண்டு பிடிக்க அமெரிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் நல்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

0 Responses to நைஜீரியப் பள்ளி மாணவிகள் கடத்தலுக்குத் தனது சீற்றத்தைப் பகிர்ந்தார் மிச்சேலே ஒபாமா