Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனிக்கிழமை 10.05.2014 அன்று சுவிஸ் பேர்ண் நகரில்  ஏறத்தாழ 33,000 போட்டியாளர்கள் சர்வதேச ரீதியாகக்  கலந்துகொண்ட "பேர்ண் க்ராண்ட் பிறிக்ஸ் 2014 (GRAND PRIX BERN 2014 )"  16.3 கி.மீ ஓட்டப்பந்தயத்தில் எமது தமிழின உணர்வாளர்களும், இளையோரும் இணைந்த 10 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு பங்குபற்றிப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அகவணக்கத்துடன் "மே 18 தமிழின இன அழிப்பு நாளை" நினைவுகூர்ந்து எமது இலட்சியமாம் தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை எமது இலட்சியப் பயணம் எம்மால் முடிந்த வழிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென உறுதிமொழி எடுக்கப்பட்டு "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்ற எமது தாரகமந்திரத்துடன் பயிற்சிகளை ஆரம்பித்தார்கள்.

சரியாக 16.40 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகின. போட்டிகளில் பங்குபற்றியிருந்த எமது வீரர்கள் "ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதிரான  ஓட்டம்" எனும் வாசகங்களைத் தமது மேலணியில் (டீ சேர்ட்)  பொறித்திருந்தார்கள்.

ஸ்ரீ லங்கா அரசின் தமிழின அழிப்பு சார்ந்த விளக்க  துண்டுப்பிரசுரங்களும் பார்வையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன‌. இக்கவனயீர்ப்பு மரதன் ஓட்டமானது  கலந்துகொண்ட  போட்டியாளர்கள், பார்வையாளர்களினதும் கவனத்தை ஈர்த்தது. ஏறத்தாழ ஒரு இலட்ச்சத்திற்கும் அதிகமான   வேற்றின மக்கள் இப்போட்டிகளைக் கண்டுகளித்தார்கள்.

0 Responses to தமிழின அழிப்பிற்கு எதிரான கவனயீர்ப்பு மரதன் ஓட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com