Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் சூழல் நிலவும் நிலையில், எதிர்க் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தற்போதிலிருந்து கருத்துக்கள் பரிமாறப்பட ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பதவி பறிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட ஆறு பேரின் பெயர்கள் பொது வேட்பாளர் தொடர்பிலான கருத்துப் பகிர்வில் முன்னிலை வகிக்கின்றன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். அந்த நிலையிலேயே, தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளும், பல சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் சோபித தேரர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் உள்ளிட்டவர்களின் பெயர்களும் பொது வேட்பாளர் தெரிவு பற்றிய பேச்சுக்களில் அடிபடுகின்றன.

ஆனாலும், ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க, ஷிராணி பண்டாரநாயக்க ஆகிய மூவரில் ஒருவரே பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் யார்?; ரணில், சந்திரிக்கா, ஷிராணி பெயர்கள் முன்னிலையில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com