2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுத் தொடர்பான மோசடி வழக்கில் இன்று கனிமொழி, ஆ.ராசா, தயாளு அம்மாள் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றிருந்த கனிமொழி உள்ளிட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜராகிவிட்ட நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மட்டும் இன்று ஆஜராகவில்லை.
உடல் நலக்குறைவு காரணமாக இவர் ஆஜராகவில்லை என்றும், உடல்நலக்குறைவு காரணமாக இவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிய வருகிறது.
தயாளு அம்மாள் தவிர குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 9 பேர் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் ஆஜராகவில்லை!