Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென் சூடானில் 5 மாதங்களாக இடம்பெற்று வரும் மோதல்களில் 1000 கணக்கான மக்கள் கொல்லப் பட்டும் 1.5 மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியும் இருந்த வேளை வெள்ளி இரவு அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பின் அனுமதியுடன் அங்கு பசியால் வாடும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அவசர உணவு உதவி சென்றடைய ஐ.நா சபை அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தென் சூடானில் ஏற்கனவே ஜனவரியில் எட்டப் பட்ட அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திட்டு சில மணி நேரங்களுக்குள் முறிந்து போயிருந்த நிலையில் அதிபர் சல்வா கீருக்கும் கிளர்ச்சிப் படைத் தலைவர் ரியெக் மச்சருக்கும் இடையே இணக்கமான 2 ஆவது ஒப்பந்தம் இதுவாகும்.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து நிவாரண மற்றும் உணவு வாகனத் தொடரணிகள் செல்ல வசதியாக வீதிகளையும் ஆற்றுக் கடவைகளையும் திறந்து விடுமாறு தென் சூடான் ஐ.நா தலைமை அதிகாரி டோபி லான்செர் இரு தரப்பையும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்தை அடுத்து உடனே புதிய தேர்தல் ஏதும் நடத்தாமல் இரு தரப்பு சம்மதத்துடன் இடைக்கால அரசு ஒன்றை நிறுவுவது குறித்து ஆலோசிக்கப் படவுள்ளது. 3 வருடங்களுக்கு முன்னர் சூடானிடம் இருந்து சுதந்திரம் பெற்ற உலகில் மிக அண்மையில் உதயமான நாடும் வறிய நாடுகளில் ஒன்றுமான தென் சூடானில் குறைந்தது 5 மில்லியன் குடிமக்கள் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தென் சூடான் அதிபர் சல்வா கீருடன் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே எதியோப்பிய தலைநகர் அட்டிஸ் அபாபா இல் இந்த சமாதான ஒப்பந்தம் எட்டப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தென் சூடானில் அமைதி ஒப்பந்தம்!: உணவு உதவியைத் துரிதப் படுத்தும் ஐ.நா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com