இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதை தடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், ஆனாலும், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை மே 18ஆம் திகதி; நினைவு கூறவிருக்கின்ற நிலையில் அந்த நினைவு கூறும் நிகழ்வுகளை தடுக்கின்ற செயற்பாட்டில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதனை நினைக்கின்ற போது கவலையும், வேதனையும் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “முள்ளிவாய்க்காலிலே நடாத்தப்பட்ட அனர்த்தங்கள்களின் போது குழந்தைகளுக்கு பால்மா வேண்டுவதற்காக வரிசையில் நின்றவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் சரணடைந்த மக்கள் கொல்லப்பட்டனர்.
அதைவிட இன்று முள்ளிவாய்க்கால் அனர்த்தம் தொடர்பில் சர்வதேசத்தில் மனித உரிமை சார்ந்த விசாரனை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களுடைய மக்களின் அவல ஓலம், அந்த அவஸ்தை, படுகொலை செய்யப்படுகின்ற போது, அவர்கள் அனுபவிக்கும் வேதனை ஆகியவற்றிற்காக இன்று நாம் கதவைத்தட்டி சர்வதேச விசாரனை என்ற நிலைக்கு வந்துள்ளோம்.
ஆனால், முள்ளிவாய்க்காலில் கண் முன்னால் உயிரிழந்த தமது குழந்தைகள், தாய், தந்தை, உறவினர்கள் ஆகியோரை நினைவு கூறுவதற்கு இந்த அரசு இந்த நாட்டில் தடை விதித்துள்ளது. இந்த நிலையை நாம் உணர்கின்ற போது, இந்த அரசு தமிழ் மக்கள் மீது எவ்வளவு கரிசனை கொண்டுள்ளது என்பதனை நாம் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளை பொது நிகழ்வாக செய்ய முடியாது என்று இராணுவம் எவ்வாறு கட்டளையிட முடியும்? 5 வருடங்களையும் தாண்டிய நிலையில் சிவில் நிர்வாகம் இல்லை என்பதனை இராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த வகையிலே வடக்கு, கிழக்கு அதிகளவில் இராணுவத்தின் பிடியில் இருக்கின்றது என்பது எமது மக்களுக்கும், உலகிற்கும் தெரிந்த விடயமாக உள்ளது.
ஆகவே, மனித உரிமை மீறல் என்பது இவ்வாறான தடைகளையும், அழுத்தங்களையும் அதனுள் கொண்டுவர முடியும். இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சிறுபான்மை இனம். அடக்கப்பட்டு அடிமைத்தனமாக தங்களின் கீழ் வாழ வேண்டும் என்ற சிந்தனை இந்த அரசிற்கு இருக்கின்ற படியால், இந்த அரசு மனித உரிமை மீறல்கள் கொண்ட அரசாக இன்றைக்கு காட்சியளிக்கின்றது. இதனால் தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சர்வதேசத்தின் கரங்களை பிடித்துள்ளது.
இந்த வகையிலே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்த முடியாத வகைளில் அந்த மக்கள் உள்ளனர். ஆனால், அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும். இந்த மோதலில் உயிரிழந்த இராணுத்தை நினைவு கூறும் இந்த அரசு தன்னுடைய நாட்டிலே உயிரிழந்த அந்த மக்களை முள்ளிவாய்க்காலில் நினைவு கூற தடை என்றால், இந்த அரசு திட்டமிட்டு முள்ளிவாய்க்கால் படுகொலையை செய்துள்ளது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலையை இந்த அரசு திட்டமிட்டு செய்துள்ளது என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் தான் சர்வதேசத்தின் விசாரனை இன்று வந்துள்ளது. எனவே வருகின்ற 18ஆம் திகதி நிச்சயமாக ஏதோ ஒரு இடத்தில் எமது மக்கள் அஞ்சலி நிகழ்வை நடாத்துவார்கள். அதனை யாராலும், எந்த சக்கியாலும் தடுத்து விட முடியாது” என்றுள்ளார்.

0 Responses to முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதை யாராலும் தடுக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன்