Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசும் அதனோடிணைந்த துணை ஆயுதக்குழுக்களும் போர்க்குற்றங்களினில் ஈடுபட்டமை சர்வதேச ரீதியினில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.அத்தகைய தரப்பினை காப்பாற்ற முற்படுவதாலேயே கூட்டமைப்பினை நாம் தொடர்ந்தும் விமர்சிக்க வேண்டியிருக்கிறதென தெரிவித்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பிலான தீர் மானம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை. தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக சட்ட ரீதியாக குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் தமிழ் மக்களுக்கான தீர்மானம் என கூறப்பட்டாலும் தமிழ் மக்களின் நலன்களை கருத் தில் கொள்ளவில்லை என்றவகையில் தீர்மானத்திற்கும் தமிழ் மக்களிற்கும் தொடர்பில்லை. இத் தீர்மானம் தமிழ் மக்களுக்கான தீர்மானம் அல்ல எனவும் தமிழ்தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா தீர்மானம் தொடர்பாக இன்றைய தினம் கட்சியில் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

சந்திப்பில் தொடர்ந்தும் அவர் கூறுகையில், ஐ.நா சர்வதேச விசாரணைகள் 4வகையாக நடத்தப் படலாம். அதில் 2மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்படலாம். 2 ஐ.நா பாதுகாப்புச் சபை யினால் நடத்தப்படலாம். இவற்றில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் ந டத்தப்படும் விசாரணையே இலங்கை விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விசாரணையின் இறுதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாக மட்டுமே அமையும். எனவே இந் த விசாரணை மிக பலவீனமானதாக அமைந்திருக்கின்றது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருக் கின்றோம். இதற்காக சிலர் எம்மை விமர்சிக்கிறார்கள் எவ்வாறெனில் நாம் தீர்மானத்தின் மூலம் சர்வதேச விசாரணை நடத்தப்படாது என கூறியதாக அவர்கள் விமர்சிக்கின்றார்கள். ஆனால் அது உன்மைக்குப் புறம்பான விடயம். பலவீனமான விசாரணை என சுட்டிக்காட்டுவதற்கும் விசாரணை நடத்தப்படாது என குறிப்பிடுவதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. மேலும் மேற்படித் தீர்மானம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவிலை. தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்க்காக, குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் ஊடாக தண்டிக்கப்படவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். உதாரணமாக சூடான் தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டு வழக்கு நடத்தப்பட்ட சட்டரீதியாக குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் அதுவல்ல தீர்மானத்தின் மூலம் நடக்கப்போவது நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வகையான தொடர்பும் இல்லை என நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். ஆதனை ஒரு குற்றமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கின்றார். ஆனால் அது குற்றமல்ல. உண்மையான விடயம்.

குறித்த தீர்மானத்தில் தமிழர் என்ற ஒரு வார்த்தை கூட பாவிக்கப்படவில்லை. மதரீதியாக பாதிக் கப்பட்ட சிறுபான்மையினர் எனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எங்கள் பிரச்சினை மதரீதியான பி ரச்சினை அல்ல. எங்களுடைய மிக நீண்டகால இனப்பிரச்சினையை மதரீதியான சிறுபான்மையின ங்களின் பிரச்சினையாக அடையாளப்படுத்துவதை எவ்வாறு ஒத்துக்கொள்ள முடியும்?

அதுவும் தமிழர்களுக்கான தீர்மானம் என்ற வாசகத்துடன் கொண்டுவரப்படுகின்றது. ஆனால் தமிழ் மக்களின் நலன்களை அல்லது அவர்களுடைய பிரச்சினைகளை எந்தவொரு கட்டத்திலும் சுட்டிக் காட்டவில்லை என்கின்றபோது அந்த தீர்மானத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எவ்விதமான தொடர்பு ம் இல்லை என சொல்வதில் தவறில்லை.

இதேபோன்றே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளை போர்க்குற்றங்கள் மற்றும் இ னப்படுகொலை போன்றன தொடர்பாக விசாரிக்க முடியாது என நாம் கூறியதாகவும். அந்த விடய ம் மிக பொய்யானது என மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினரே கூறியிருக்கின்றார். ஆனால் நா ங்கள் குறிப்பிடுவது என்னவென்றால் மனித உரிமை என்பது வேறு. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் என்பது வேறு. எனவே சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான விசாரணை நடத்துவதென்றால் அது சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான விசாரணையாக ஒருபோதும் அமையாது. மேலும் தீர்மானத்தின் 2ம் பகுதியில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணை என கூறப்பட்டுள்ளது. ஆனால் 10ம் பகுதியில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் ம ற்றும் அதனோடு ஒட்டிய குற்றங்களுக்கான விசாரணை என குறிக்கப்பட்டிருக்கின்றது. எனவே இ தில் 10ம் பந்தியில் குறிப்பிடப்பட்தே நடைமுறைக்கு வரும். எனவே சர்வதேச மனிதாபிமான சட் ட மீறல்களுக்கான விசாரணை என்பது 2ம் பகுதியில் குறிப்பிடப்பட்டு, 10ம் பகுதியில் திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணை நடத்தப்பட்டால் இங்கே நடைபெற்ற இனப்படுகொலை, மற்றும் போர்க்குற்றங் களுக்கான விசாரணை நடத்தப்படப்போவதில்லை. ஏனெனில் அவை சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குள் வருகின்றன.

எனவே எங்கள் கட்சி 6ஆவணங்களை வழங்கி நாங்கள் எதிர்பார்த்த தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கின்றோம் என கூறும்  நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சி விரும்பியே இவ்வாறு போர்க்குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை போன்றவற்றை விசாரிக்க முடியாத அரைகுறை தீர்மானத்தை நிறைவேற்றியது?

மேலும் ஆபிரிக்க நாடுகள் சில ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் இறுதியான மு டிவினை எடுப்பதில் குழப்பமடைந்தாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினரே கூறியிருக்கின்றார். அ தற்கு காரணம் தமிழ் தரப்பினர் சிலரின் எதிர்மாறான விமர்சனமாம். இது ஒரு அப்பட்டமான பொ ய். நடந்தவைகள் வேறு.

தீர்மானம் தொடர்பான சரியான முடிவுகளை எடுப்பதற்கான ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் சி லரை நாங்கள் சந்தித்தபோது அவர்கள் உடனடியாகவே சொன்னார்கள் அமெரிக்கா உட்பட மே ற்கு நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்போம். அவர்களுடைய நோக்கம் வெறு ம் ஆட்சி மாற்றம் மட்டுமே என்று.

அப்போது நாங்கள் கூறியது வெறுமனே எதிர்ப்பினை காண்பிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிலையிலிருந்து தீர்மானத்தை வலுவானதாக்க ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று. அதன் பின்னர் அவர்கள் ஆபிரிக்க ஒன்றியத்தின் கூட்டத்தில் எம்மை பேசி மற்றய நாடுகளின் ஒத்துழைப்பினையு ம் பெறுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதன்படி நாங்கள் மார்ச் மாதம் 21ம் திகதி ஆபிரிக்க ஒன்றியத்தில் பேச இருந்தபோது இதே நாடாளுமன்ற உறுப்பினருடன் வந்திருந்த ஒரு சிங்கள நபரும், சில புலம்பெயர் தமிழர்களும் இணைந்து அதனை குழப்பினார்கள். நாங்கள் கேட்கிறோம் நாங்கள் அங்கே யாருக்காக பேசுவதற்குச்சென்றோம்?

குறித்த தீர்மானத்தை பலப்படுத்துவது யாருக்கு நன்மையளிக்கும்? எனவே தமிழ் மக்கள் நன்றா க சிந்திக்கவேண்டும். யார் மக்களுக்காக உழைக்கின்றார்கள் என்பதை. மேலும் அதே நாடாளும ன்ற உறுப்பினரே கூறுகின்றார் இம்முறை ஐ.நா தீர்மானத்தில் இந்தியா ஒத்துழைப்பு வழங்காமை க்கு தமிழகத்திலிருந்து அழுத்தங்கள் உண்டாகவில்லையென்பதே காரணமென்கிறார். அதற்கு காரணம் தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்கள் என்றும் கூறுகின்றார். மேலும் அதனால் தமிழகத்தில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் கூறுகின்றார். ஆனால் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் உண்மையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் வலுவற்றது. அதனை வலுவானதாக்கி இந்தியாவே கொண்டுவரவேண்டும் என்பதற்கான போராட்டங்களே அவை.

அதனை விட குறித்த நாடாளுமன்ற உறுப்பினரும், அவர் சார்ந்த கட்சியின் மாகாண முதலமைச் சரும் கூறினார்கள். இந்திய தமிழக மக்கள் ஈழத்தமிழர் விடயத்தில் தலையிடக் கூடாது. எங்கள் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம் நீங்கள் உங்கள் பிரச்சினைகளை  பாருங்களென பேசிக்கொண்டிருந்தனர். எனவே தமிழக மக்களுக்கு அது சோர்வினை உண்டாக்கியிருக்கும். அதனால் அவர்கள் போராடாமல் இருந்திருப்பார்கள். எனவே தமிழக மக்கள் போராடாமைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்காமைக்கும் காரணம் குறித்த நாடாளு மன்ற உறுப்பினரும், அவர்சார்ந்த கட்சியுமே எனவும் அவர் தெரிவித்தார்.

இப்பத்திரிகையாளர் மாநாட்டினில் அவருடன் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான இணைப்பாளர் வி.மணிவண்ணன் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

0 Responses to போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற கூட்டமைப்பு முற்படுகின்றது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com