Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை சுமந்திரனிடம் கையளிக்க சம்பந்தன் முற்பட்டுள்ளதாக எழுந்த தகவல்களினையடுத்து பங்காளி கட்சிகளிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில் சுமந்திரனை நேரடியாக போட்டியிட வைத்து அவரிடம் தலைமைத்துவத்தை கையளிக்க சம்பந்தன் முற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.எனினும் இதனை சுமந்திரன் மறுதலித்துள்ள நிலையில் அதனை சுரேஷ் பிரேமச்சந்திரனும் மறுதலித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தென்னிலங்கை ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியாகியுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மே நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளின் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பங்கேற்கவில்லை. கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ முரண்பாடுகள் காரணமாகவே அவர் மே நாள் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறான செய்திகளை மறுத்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன்,மருத்துவச் சிகிச்சைக்காகவே சம்பந்தன் எம்.பி. இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அதனால்தான் அவர் மே நாள் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லையெனவும் அவர் பங்கேற்காமைக்கு வேறு எந்தக் காரணங்களும் இல்லை என்றும் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பந்தன் எம்.பி. உட்பட கூட்டமைப்பு எம்.பிக்கள் அனைவரும் பங்கேற்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா? மறுதலிக்கின்றார் சுரேஸ்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com