Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் மன்மோகன் சிங், ஒபாமாஉள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரிவு உபச்சார கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகிற 16ம் திகதி வெளியாகவுள்ள  நிலையில், 17ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறார் என்று தெரிய வருகிறது. எனவே, ரேஸ்கோர்ஸ் சாலையில் வசித்து வரும் பிரதமர், ஷீலா தீட்சித் வசித்துவந்த இல்லத்துக்கு குடிபெயரவும் பலமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  வருகிற 17ம் திகதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பிரிவு உபச்சார உரையாற்றவும் இருக்கிறார்.

வருகிற 14ம் திகதி மன்மோகன் சிங்குக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரிவு உபச்சார விருந்து நடத்தி நல்ல பரிசுப்பொருள் ஒன்றையும் வழங்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. இதற்கிடையில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட அனைத்து நாட்டு முக்கியத் தலைவர்களுக்கு பிரிவு உபச்சார கடிதமும், அதில் 10 ஆண்டுகள் தனது தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு  பலப்பட அமைய உதவியதற்கு நன்றி தெரிவித்தும் எழுதியுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல் தெரிவிக்கிறது.

0 Responses to ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com