(இலங்கை அரசியல் கள நிலைமைகளை நேர்த்தியான பார்வையோடு தொடர்ச்சியாக எழுதி வருபவர் ‘பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன்’ அவர்கள். அவர், இன்றை தினக்குரலில் எழுதியுள்ள இந்தக் கட்டுரையை தினக்குரலுக்கான நன்றி அறிவிப்போடு மீள்பிரசுரம் செய்கிறோம்)
கடந்த வாரக்கட்டுரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையையும் பேச்சுவார்த்தையையும் நோக்கி ஒரே சமயத்தில் செயற்படுவதில் உள்ள முரண்பாடு பற்றியே அடிப்படையான கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதுஒருவகையில் அரசாங்கத்துக்கு சாதகமான ஒரு போக்கு அல்லது நிலைப்பாடு என்பது ஒருபக்க விளைவு என்பது போலவே சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் அல்லது அதன் முன்னணி உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் திரைமறைவில் ஒருவித ஒப்பந்தம் காணப்படுகின்றதோ என்ற சந்தேகம் தோன்றியிருக்கவில்லை. இந்த ஒருவார காலப்பகுதியில் அந்த சந்தேகம் தோன்றுவதற்கு இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இரண்டாவது காரணியே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
அத்துடன் சுட்டிக்காட்டப்பட வேண்டியது என்னவெனில் இன்றைய நிலையில், இது அடிப்படை அற்ற சந்தேகம் அல்ல என்றபோதும் வெறும் சந்தேகம் மட்டுமே. வயிற்றில் பிள்ளை இருந்தால் வெளியே வந்தே ஆகவேண்டும் என்பது போல, அவ்விதமான ரகசிய உடன்படிக்கை ஒன்று இருந்தால் அது எமக்கு தெரிந்தே ஆக வேண்டும். மிக விரைவில்.
இவ்விரண்டு காரணிகளில் முதலாவது ஜெனீவா நிகழ்வுகள் தொடர்பிலானது. கடந்தவாரம் கூட்டமைப்பினுள்ளிருந்தும் வெளியிலும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜெனீவாவில் நடந்துகொண்ட விதம் பற்றி பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையை வலியுறுத்திக் கேட்கவில்லை என்பது. இலங்கைக்கு எதிரான (குறைந்த மட்டத்திலான) தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டால் போதுமானது என்ற நிலைப்பாட்டையே அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று கூறப்பட்டது. மார்ச் மாதம் நாம் ஜெனீவாவில் இருக்கவில்லை என்பதனால் இது எந்த அளவிற்கு உண்மையானது என்பது தெளிவானது அல்ல.
இருப்பினும், இது உண்மையாக இருந்திருக்குமாயின் சுட்டிக்காட்டப்பட வேண்டியது அந்த நிலைப்பாட்டிற்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் இடையில் ஒருவேறுபாடும் காணப்படவில்லை என்பது. இவ்வாண்டும் ஜெனீவாவில் அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்பதில் யாருக்கும் ஒரு சந்தேகமும் காணப்படவில்லை. சந்தேகத்திற்குரியதாக இருந்தது. அத்தீர்மானத்தின் தாற்பரியம் என்ன என்பது மட்டுமே. அமெரிக்கா சென்று வந்த லலித் வீரதுங்க நாம் (அரசாங்கம்) என்ன செய்தாலும் அமெரிக்கா தீர்மானத்தைக் கொண்டுவந்தே தீரும் என்பதை முன்னரே சுட்டிக்காட்டி இருந்தார்.
எனவே, அரசாங்கத்தின் தந்திரோபாயமாக அமைந்தது தாக்கத்தைக் குறைத்துக் கொள்வது ஆகும். சர்வதேச விசாரணையைக் கோராத குறைந்தபட்சத் தீர்மானம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகவும் இருந்தது. அத்துடன், கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தனர் என்றும் அப்போது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இருப்பினும், இதுவல்ல இன்றைய கட்டுரையின் நோக்கம்.
நாம் இன்று எடுத்துக்கொண்ட விடயம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் விக்னேஸ்வரன் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்கின்ற கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்லது கோரிக்கை ஆகும். இப்பிரச்சினையின் ஆரம்பம் ராவய பத்திரிகையில் முன்னணி சிங்கள அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரும், இக்கட்டுரை ஆசிரியர் நண்பரும் ஆகிய குசல் பெரேரா எழுதிய கட்டுரை ஒன்றுடன் ஆரம்பமாகியது. எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் என்று பேசுகின்ற போது சிங்களவர் ஒருவரைத் தேடுவது சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் ஒரு வெளிப்பாடு என்று அவர் கூறியுள்ளார். ஒரு முற்போக்கு சிந்தனைவாதி என்ற வகையில் இக்கருத்து ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கவில்லை. அது தவறானதாகவும் இருக்கவில்லை.
இந்த நாட்டுக்கு இப்போது தேவையானது என்னவெனில் ஒரு தேசிய பொதுவேட்பாளராக நம்பிக்கையைப் பெறக்கூடிய நம்பிக்கைக்குரிய ஒருவரே என்று அவர் கூறி அவ்வகையில் விக்னேஸ்வரன் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதும் அவரது அபிப்பிராயமாக அமைந்தது.
குசல்பெரேராவின் இக்கருத்தை இறுக்கிப்பிடித்துக் கொண்டுள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் விக்னேஸ்வரனே சிறந்த பொதுவேட்பாளராக இருக்க முடியும். அவ்விதம் அவரைப் பொதுவேட்பாளராக நியமிக்க முடியாவிடின் அதற்கான காரணத்தை எதிர்க்கட்சிகள் (ஐ.தே.கட்சியும், ஜே.வி.பி.யும், பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும்) கூறவேண்டும் என்று சவால் விடுத்துள்ளனர். இது சுவாரஸ்யமான ஒரு திருப்பம் ஆகும். அதில் அரசியல் அர்த்தங்கள் பலவும் பொதிந்திருக்கக்கூடும்.
முதலாவது, இந்த சவால் எதிர்க்கட்சிகளை நோக்கிவிடப்பட்டுள்ளதே அன்றி அரசாங்கத்தை நோக்கி அல்ல. அதில் எதிர்க்கட்சிகள் சிங்கள பௌத்த பேரினவாதப் பண்புகளைக் கொண்டுள்ளன என (குசல்பேரரா போன்று) குற்றஞ்சாட்டும் தொனி பொதிந்துள்ளது. எனினும் எதிர்பார்ப்பு என்னவெனில், கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாடு ஒன்றைக் கொண்டுள்ளமையினால், எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடும் என்பதாகும். இதற்கான காரணங்கள் பல காணப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்திருந்தது.
எனவே, இப்போதும் கூட்டமைப்பு அரசாங்கத்தை எதிர்ப்பது உண்மையெனில் அது சவாலுக்கு உட்படுத்த வேண்டியது அரசாங்கத்தையே அன்றி எதிர்க்கட்சிகளை அல்ல. இது எதிர்க்கட்சிகளுடன் சாதகமான பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்க வேண்டிய நேரம் ஆகும். எனவே, இன்று கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளுக்கு விடுத்துள்ள சவால் அவ்விதமான பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. உண்மையில் இது ஒரு பிரச்சினையே அல்ல. அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மாறுவது அசாத்தியமானது அல்ல. எனவே, கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்ற பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். அது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும்.
உண்மையான பிரச்சினை விக்னேஸ்வரன் (பொது) வேட்பாளராக நியமிக்கப்பட்டால் என்பதாகும். இலங்கையில் வாக்களிப்பு அரசியல் இன ரீதியாக வரையறுக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. அதற்கு தமிழ் மக்களும் கூட விதிவிலக்கு அல்ல. பாராளுமன்ற தேர்தல்களில் இனத்தேசியவாத அடிப்படையில் அரசாங்கத்துக்கு வாக்களிப்பது போலவே தமிழ் மக்கள் தேசியவாத அடிப்படையில் கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் வெற்றிபெற முடியாது என்பதனால், பெரும்பாலான முஸ்லீம் மற்றும் தமிழ் வாக்காளர்கள் சிங்களவர் ஒருவருக்கு வாக்களிக்கக்கூடும்.
இருப்பினும், ஜனாதிபதித் தேர்தலில் சிங்களவர் ஒருவரே வெற்றி பெறுவார் என்பதனால் சிங்களவர் ஒருவரே வெற்றிபெறுவார் என்பதனால் சிங்கள வாக்காளர் எவரும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கப் போவதில்லை. இது யதார்த்தம். இந்த யதார்த்தத்தில் ஒரு இனவாதம் கலந்துள்ளது என்பது வேறு விடயம்.
அதேசமயம் யதார்த்தம் வேறு, எது சரியானது என்பது வேறு என்பதும் சுட்டிக்காட்டிக் காட்டப்படவேண்டும். ஜனாதிபதி தேர்தலில் சிங்களவர்கள் ஒரு தமிழருக்கு வாக்களிக்கப் போவது இல்லை என்பதனால் விக்னேஸ்வரனுக்கும் வாக்களிக்கப் போவதில்லை. கதிர்காமர் செய்ய முடியாததை விக்னேஸ்வரன் செய்துவிட முடியும் என்று எவரும் கூறமுடியாது. எனவே கூட்டமைப்பின் சவாலை ஏற்று ஐ.தே.கட்சியோ அல்லது ஏனைய கட்சிகளோ விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிக்குமேயாக இருப்பின், இக்கட்டுரை ஆசிரியர் அடித்துக்கூறக் கூடியது என்னவெனில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ ‘வீட்டிலிருந்தே’ வெற்றிபெற முடியும் என்பதாகும். எனவே, அடிப்படையில் விக்னேஸ்வரன் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்துக்கு சார்பான ஒரு நிலைப்பாடு என்பதில் சந்தேகமில்லை.
எனவே, விக்னேஸ்வரனே சரியான பொதுவேட்பாளர் என்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட எதிர்க்கட்சிகள் அவரை பொதுவேட்பாளராக நியமிக்கப் போவது இல்லை என்பது நிச்சயமானது. ஏனெனில் நிச்சயமாக தோற்கப் போகும் ஒருவரை அவர்கள் நிறுத்தப் போவது இல்லை. இதுவே யதார்த்தத்திற்கும் சரியானது எது என்பதற்கும் இடையிலான வேறுபாடு. இது தெளிவாகத் தெரிந்தவர் இப்போதே விக்னேஸ்வரனை ஏற்றுக்கொள்ளுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுவது தமிழ்மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கமுடையதாக இருக்கலாம்.
அடுத்த கேள்வி என்னவெனில், எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக விக்னேஸ்வரனை நிராகரிக்கின்ற போது கூட்டமைப்பு என்ன செய்யும் என்பது. அது நிறுத்தப்படுகின்ற பொதுவேட்பாளரை (கடந்த முறை செய்தது போல) ஆதரிக்குமா அல்லது விக்னேஸ்வரனே சரியான தெரிவு என்ற (இப்போதைய) நிலைப்பாட்டினடிப்படையில், அவரை ஒரு வேட்பாளராக களத்தில் இறக்குமா என்பது முக்கியமான கேள்வி ஆகும். ஏனெனில் விக்னேஸ்வரனே சரியான வேட்பாளர் என்று இப்போது மார்தட்டிவிட்டு, பின்னர் வேறு ஒரு பொதுவேட்பாளரை ஆதரிப்பது அவ்வளவு இலகுவாக இராது.
எனவே, விக்னேஸ்வரன் தென்னிலங்கைக் கட்சிகளால் நிராகரிக்கப்படுகின்ற போது, கூட்டமைப்பு சுயமாக(அல்லது தூண்டுதலின் பேரில்) விக்னேஸ்வரனை ஒரு வேட்பாளராக நியமிக்கும் சாத்தியம் இருக்கவே செய்கின்றது. இதுவும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும், ஏனெனில் விக்னேஸ்வரன் களமிறக்கப்படுவது 2005ஆம் ஆண்டின் தேர்தல் சூழ்நிலையை ஏற்படுத்துவதாக இருக்கும். இத்தகைய அபிவிருத்தி தேர்தல்வாக்கு சமபலத்தில் இருந்து தமிழ்வாக்குகள் பெரும்பாலானவற்றை வெளியேற்றிவிடும்.
இன்றைய நிலையில் அரசாங்கத்தின் தேசியவாத போக்குகள் கொள்கைகள் அடிப்படையில் தனித்து சிங்கள வாக்குகளுடன் மட்டும் வெற்றி பெற்றுவிடக்கூடிய சாத்தியம் ஜனாதிபதிக்கு உண்டு. ஆயினும், இந்த சொகுசு எதிர்க்கட்சிகளுக்கு காணப்படவில்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற வேண்டுமாக இருப்பின் சிறுபான்மை வாக்குகள் மிக அவசியமானவை ஆகும். விக்னேஸ்வரன் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவது சிறுபான்மை வாக்குகளில் பெரும்பான்மையானவற்றை இல்லாமல் செய்துவிடும். இது அரசாங்கத்தைப் பொறுத்தவரை இலாபகரமானதே! ( skeetha@yahoo.com)

0 Responses to தேர்தல் அரசியலும் ஜனாதிபதி(யாக) சி.வி.விக்னேஸ்வரனும்!