Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மெரீனாவில்  இன்று மாலை இனப்படுகொலை  நாள் நினைவேந்தல் நிகழ்வு நடை பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர். தமிழீழம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்ற உறுதியுடன் நிகழ்வு நடை பெற்றது.

விடுதலை புலிகளின் தடை 5 ஆண்டு இந்தியா நீடுத்திருக்கும் நிலையில் மெரீனா கடற்கரையில் தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களுடன் மக்கள் திரளாக ஒண்டு கூடினர்.

இக் கூட்டத்தை மே 17 இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது, இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், கோவை ராமகிருஷ்ணன், தமிழ்தேசிய பொதுவுடைமை கட்சி மணியரசன், ஓவியர் வீரசந்தம், பொழிலன், மேலும் பலர் கலந்து ஈழத்தில் இறந்த மக்களுக்கும் , மாவீரர்களுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம்  செலுத்தினர்.

0 Responses to சென்னை மெரீனாவில் அலையென திரண்ட மக்கள்: இனப்படுகொலை நாள் நினைவேந்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com