Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடனைச் செய்வதற்கு யாழ்ப்பாணம் கீரிமலை ஆலயத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய இராணுவத்தினால் மூடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தினம் நேற்று மே 18 (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது. அதனொரு பகுதியாக மோதல்களில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செலுத்தும் நிகழ்வொன்று கீரிமலையில் ஏற்பாடாகியிருந்தது. ஆனாலும், இராணுவத்தினரின் தடையினால் அது நடைபெறவில்லை.

இந்த நிலையில், இராணுவத்தினரின் குறித்த செயற்பாட்டைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இறந்தவர்களுக்காக செய்யப்படுகின்ற பிதிர்கடனை கூட செய்யவிடாமல் கீரிமலைக்கு செல்லும் சகல வீதிகளும், யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் அலுவலகங்களும் இராணுவத்தனால் மூடப்பட்டது. நல்லூர் உள்ளிட்ட யாழ் குடாநாட்டின் அனைத்து ஆலயங்களிலும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்த கூடாதென இராணுவம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இறுதி மோதல்களின் போது இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளமையை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது. அவர்களை நினைவு கூருவதற்கு கூட இந்த அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை“ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இறந்தவர்களுக்கு பிதிர்கடனை செய்வதைக் கூட அரசாங்கம் அனுமதிக்கவில்லை: த.தே.கூ குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com