Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜாதிக பல சேனா அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நுழைந்து குழப்பம் விளைவித்தமை மற்றும் புனித குரானுக்கு அவமதிப்பு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட ஆறு பிக்குகளை பிணை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கு அமைய சம்பந்தப்பட்ட பிக்குகள் நேற்றுத் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீண்ட விசாரணையின் பின்பு சந்தேக நபர்களான பிக்குகளை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு நிதிபதி உத்தரவிட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுரா சேனாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

‘மதங்களுக்கு எதிராக தாகுதல்களை மேற்கொள்ளும் குழுக்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த நாம் தயங்க மாட்டோம். பௌத்த, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமூகத்தில் கூட மதங்களுக்கிடையே முறுகல் நிலைகளை ஏற்படுத்தும் குழுக்கள் இருக்கின்றன. இவர்களுக்கு எதிராக முறைபாடுகள் சமர்பிக்கப்பட்டால் அதனை விசாரணை செய்வதற்கும் நாம் தயங்க மாட்டோம்’ என பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

பிணையின் கீழ் விடுதலை செய்யப்பட கலகொட அத்தே ஞானசார தேரர், பொலிஸார் எமக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தியிருந்தாலும், பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சட்டம் ஏன் செயற்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமக்கு எதிராக எந்த விதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

0 Responses to புனித குரான் அவமதிப்பு வழக்கு; பொது பல சேனாவின் 6 பிக்குகளிற்கு பிணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com