Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு சாட்சியமாக இன்றும் இருக்கும் புனித யாகப்பர் ஆலயத்தினில் படையினரது கெடுபிடிகளையும் தாண்டி நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த திருப்பலி பூசை மற்றும் ஆராதனை நினைவுகளினில் பங்கெடுத்திருந்தனர்.

குறித்த தேவாலய திருப்பலி பூசைகளினை தடுத்து நிறுத்தும் நோக்கினில் அங்கு பிரசன்னமாகியிருந்த படை அதிகாரி வழிபாட்டிற்கு வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.எனினும் அதனை மறுதலித்த பங்கு தந்தை முல்லைதீவு கட்டளை தளபதியிடம் அனுமதி பெற்றிருந்ததாக கூறிய போது அதனை மறுதலித்த குறித்த அதிகாரி தான் யாழ்.மாவட்ட கட்டளை தளபதியினால் அனுப்பப்பட்டவரென அடையாளப்படுத்தியுள்ளார்.

அங்கு பிரச்சன்;னமாகியிருந்த வடமாகாணசபையின் கூட்டமைப்பு பிரதி தவிசாளர் ஜெகநாதன் கருத்து வெளியிடுகையினில் யுத்தத்தினில் கொல்லப்பட்ட எல்லாளனிற்கு கௌரவம் வழங்க தனது வீரர்களிற்கு உத்தரவிட்ட துட்டகைமுனுவின் பிள்ளைகளென தம்மை கூறிக்கொள்ளும் இவர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்த கூட அனுமதி மறுக்கின்றனரென தெரிவித்தார்.

0 Responses to புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com