இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் எதிர்வரும் 26ஆம் திகதி நரேந்திர மோடி இந்தியாவின் 14வது பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், அந்த நிகழ்வில் கலந்து கொள்ள கோரும் அழைப்பு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நான்காவது மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது தொடர்பில் அறிவிப்பார் என்று நம்பப்படுகிறது.

0 Responses to மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார்?