பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இரண்டு மாணவிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமது தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வருங்காலங்களில் இதுப்போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதுக் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
விடுதியில் மாணவர்கள், மற்றும் மாணவிகள் ஒரே அறையில் தங்கவைக்கப்பட்டதும், விடுதிக் காப்பாளர் விடுப்பில் சென்றிருந்ததும், பொறுப்பில் உள்ளவர்கள் விடுதியில் தங்காமல் தனது இல்லத்தில் தங்கியிருந்ததும் குற்ற நிகழ்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு நெறிமுறைகளை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் முதல்வரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகளை உடனடியாக கண்டுப்பிடித்து கைது செய்யவும் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், சிறந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட சிறுமிகள் இருவரும் முறையே 5 மற்றும் 6ம் வகுப்பு மாணவிகள் என்பதுக் குறிப்பிடத் தக்கது. சோதனையில் ஒரு மாணவி பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவலை மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ளது.

0 Responses to பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிகளுக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு!: ஜெயலலிதா