Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈராக்கில் சமீபத்தில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய ISIS சுன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் அந்நாட்டின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுலையும், சதாம் ஹுசைனின் சொந்த ஊரான டிக்ரிட்டையும் கைப்பற்றி இருந்ததுடன் தலைநகர் பக்தாத்தினையும் கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

தீவிரவாதிகளைச் சமாளிக்க முடியாமல் ஈராக் அரசு அமெரிக்கா உட்பட மேற்குலகின் உதவியை வேண்டியிருந்தது.

இந்நிலையில் ஈராக்கின் அண்டை நாடான ஈரான், ஈராக்கில் ISIS தீவிரவாதிகளுடனான போராட்டத்தை வழிநடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இத்தகவலை ஈரான் அதிபர் ஹஸ்ஸன் றௌஹானி அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார். எனினும் இவர் ஈரான் தனது துருப்புக்களை அனுப்பி ஈராக் அரச படைகளை வலுப்படுத்தியிருப்பதாக மேற்குலக ஊடகங்கள் வெளியிட்ட தகவலை மறுத்துள்ளார். இந்நிலையில் ISIS சுன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் ஈராக்கில் வசிக்கும் பெரும்பான்மையினமான ஷியா முஸ்லிம் மக்களை நாத்திகர்கள் என விமர்சித்துள்ளனர். மேலும் ஈராக்கின் முன்னால் சுன்னி அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்காவால் கைது செய்யப் பட்டு தூக்கிலிடப்பட்ட பின் அதிகாரத்துக்கு வந்த ஷியா தரப்பு தலைமைத்துவத்துடன் ஈரான் தனது உறவை வலுப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஈரானின் ஷியா முஸ்லிம் பிரிவின் தலைவரான ஹசன் றௌஹானி, தனது வெற்றியின் முதலாம் ஆண்டு அனுசரிப்பின் போதான செய்தியாளர் மாநாட்டில் தனது உதவியை ஈராக் அரசு நாடியிருப்பதாகவும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஈரான் பங்கேற்கும் என்றும் கூறியுள்ளார். இன்னொரு புறம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஈராக் விவகாரம் தொடர்பான ஊடகப் பேட்டியில் கருத்துரைக்கையில் ஈராக் அரசுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவுவதற்கான முடிவு இன்னும் சில நாட்களில் எடுக்கப் படும். அனால் அமெரிக்கப் படைகளை இம்முறை அனுப்பும் எண்ணம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். ஆயினும் ISIS தீவிரவாதிகள் வெறுமனே ஈராக் மக்களுக்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் சேர்த்தே அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இதேவேளை அமெரிக்கா ISIS தீவிரவாதிகள் மீது வான்வெளித் தாக்குதலை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் பிளவுகளை ஈராக் சரி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகவும் ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கில் மோசுல் நகரை ISIS தீவிரவாதிகள் கைப்பற்றிய போது அந்நகரை விட்டு 500 000 மக்களும் டிக்ரிட் மற்றும் சமர்ரா நகர்ப் பகுதிகளில் இருந்து 40 000 பொது மக்களும் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈராக் பிரச்சினையில் உதவத் தயார் என ஈரான் அறிவிப்பு!:அமெரிக்கா உதவுவது தொடர்பில் நிபந்தனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com