போர்க்குற்ற விசாரணை வேண்டாம் என்று அடம்பிடித்த எத்தனையோ நாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இதற்கு முன்னர் பார்த்துள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில்,எவ்வாறு விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று அவரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதில் வழங்கியுள்ள அவர், விசாரணை வேண்டாம் என்று அடம்பிடித்த பல நாடுகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்திய அனுபவம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த நன்கு ஆராயப்பட்ட செயல்முறைகள் பின்பற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விசாரணைகளுக்கான இணைப்பாளராக இந்த துறையில் 20 வருடங்கள் அனுபவம் கொண்ட சென்ட்ரா பெய்டாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணை வேண்டாம் என அடம்பிடித்த நாடுகளை ஐ.நா பார்த்துள்ளது!!