Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் பலாத்கார புகாரில் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த புதன் கிழமை அன்று பொள்ளாச்சியில் தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இரண்டு மாணவிகளும் 5 மற்றும் 6 வது படிக்கும் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் ஒரு மாணவி பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் முக்கியக் குற்றவாளிகளை போலீசார் நேற்று இரவு கைது செய்து, விடிய விடிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் பலாத்கார புகாரில் இருவர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com