Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேவைப்பட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மத்திய அரசு ஆதரவு அளிக்கத் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஜெயலலிதா பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். பேருந்து எரிப்பு சம்பவங்களும், இதுவரை இரண்டு பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமைக் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லியில் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ராஜ்நாத் சிங், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமைக் குறித்து தமிழக காவல்துறை உயர் அதிகாரி, தமிழக உள்துறை செயலர் இவர்களிடம் மத்திய உள்துறை செயலர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்கள் மட்டுமே வன்முறை இருந்தது என்றும், தற்போது நிலைமைக் கட்டுக்குள் வந்து மக்களின் இயல்பு வாழ்க்கைத் திரும்பியுள்ளதாகவும் தங்களுக்குத் தகவல் வந்துள்ளதாக கூறியுள்ள ராஜ்நாத் சிங், தமிழக காவல்துறையினரே மிகச் சிறப்பாக சட்டம், ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் தேவைப்பட்டால் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to தேவைப்பாட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆதரவுதரத் தயார்!: ராஜ்நாத் சிங்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com