தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக இராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 4ம் திகதி தங்கச்சிமடம் கண்ணுப்பாடு தென்கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான படகு ஒன்று காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கியூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில் இராமேஸ்வரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிவதர்ஷன், சிலோசினி, மாணிக்கம், பிரசாத், ரமேஸ் மற்றும் சிலோமை நல்லம்மா ஆகிய 6 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாகக் கூறி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கைக்கு செல்ல முற்பட்டபோது, படகு இயந்திரக் கோளாறு காரணமாக பயணம் தடைப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த படகை தங்கச்சிமடம் கரைக்கு கொண்டு சென்று இயந்திரத்தை அருகே இருந்த சவுக்குக்காட்டுப் பகுதியில் மறைத்து வைத்து விட்டு 6 பேரும் மதுரை வாடிப்பட்டிக்குச் சென்றுள்ளனர்.
மீண்டும் இந்த 6 பேரும் இலங்கைக்கு செல்ல மற்றொரு படகை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த படகு நேற்று முன்தினம் காலை இராமேஸ்வரம் தென் கடல் பகுதிக்கு வரும் என்ற நிலையில் 6 பேரும் இராமேஸ்வரத்திற்கு பஸ்ஸில் வந்து காத்திருந்துள்ளனர்.
இதன்போது அவர்களை கியூ பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற 6 பேர் கைது