Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபையானது தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களிலிருந்து விலகி புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் கொள்கைகளை நிறைவேற்றும் ஓர் அங்கமாகவே செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு - செலவு திட்டத்தில் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வித தேவைக்காகவும் பயன்படுத்தப்படாமலிருப்பதே இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏனைய மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, போதுமானதாக இல்லாத சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண சபை மாத்திரம் மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் இருப்பது அறியாமையா? அல்லது அப்பணம் வேண்டாமென முடிவு செய்துள்ளார்களா என்பது தமக்கு புரியாத புதிராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்காத போதிலும், மத்திய அரசாங்கம் வடக்கு மாகாணத்தை கைவிடப்போவதில்லை. யாழ்ப்பாணத்தில் இன்று ‘கார்பெட்’ இல்லாத வீதிகளேயில்லை. தற்போது கூட 04 வீதிகளுக்கு ‘கார்பெட்’ போடப்பட்டு வருகின்றது.

வெளிநாடுகளில் கடன் வாங்கியாவது ரயில் வீதியை புனரமைத்து கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி ரயில் சேவையை ஆரம்பித்துள்ளோம். ‘யாழ்தேவி’ ரயில் யாழ் மண்ணை தொட்டபோது அப்பகுதி வாழ் மக்கள் குதூகலத்தில் ஆரவாரம் செய்தனர். ஆனால் முதலமைச்சரோ, மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்களோ அங்கு வருகை தந்திருக்கவில்லை. அவர்கள் எத்தகைய தீர்மானங்களை மேற்கொண்டாலும், மக்களின் மனதை வெல்வதற்கு முடியாது என்பதனை இதனூடாக புரிந்து கொள்ள முடிந்தது” என்றுள்ளார்.

0 Responses to புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் அங்கமாகவே வடக்கு மாகாண சபை செயற்படுகின்றது: சுசில் பிரேமஜயந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com