Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு அனுப்புவதற்கான படிவத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிராஞ்சியை சேர்ந்த தமிழ் தேசிய உணர்வாளரான 58 வயதுடைய சின்னத்தம்பி கிருஸ்ணன் என்பவர் இராணுவ புலனாய்வாளர்களால் சனிக்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இரணைமாதா நகரில், ஐ.நா. விசாரணை படிவங்களை விநியோகம் செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி இராணுவ புலனாய்வாளர்கள் அலுவலகத்தில் வைத்து மேற்படி நபரை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

0 Responses to போர்குற்ற விசாரணை படிவம் விநியோகித்தவர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com