வடக்கு பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனாலும், வடக்கு மாகாண சபை வைக்கோல் பட்டறை நாய் போல செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வடக்கு மாகாண சபை ஒத்துழைப்புத் தருவதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கு பகுதிக்கான விஜயத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிளிநொச்சியில் காணி வழங்கும் நிகழ்வொன்றில் காலை 11.50 மணியளவில் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “படையினர் வசமிருந்த பல காணிகளை விடுவித்து சொந்த மக்களிடம் கையளித்தோம். யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்தி சமூகத்துடன் இணைத்துள்ளோம்.
இப்போது உங்கள் காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குகிறோம். கிளிநொச்சி மாவட்டத்தை புதிய நிர்வாக நகரமாக மாற்றி அபிவிருத்தி செய்துவருகிறோம்.
அபிவிருத்தி வேறு அரசியல் வேறு. அதை நீங்கள் உணருவீர்கள். அரசியல் மட்டும் செய்து மக்களை, அவர்களது எதிர்பார்ப்புக்களை திருப்திப்படுத்தமுடியாது. மக்கள் சேவையே மகேசன் சேவை. இதன்மூலம் தான் நாட்டை எல்லா வழிகளிலும் அபிவிருத்தி செய்யமுடியும்” என்றுள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதியின் வடக்கு மாகாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தின் இறுதி நாளான நாளை திங்கட்கிழமை யாழ்ப்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள வடக்கு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபை வைக்கோல் பட்டறை நாய் போல செயற்படுகிறது; கிளிநொச்சியில் மஹிந்த