Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழக் கோரிக்கைக்கும், நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள், சர்வதேச சமூகம் உள்ளிட்ட தரப்புக்களை ஏமாற்றி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இப்போது சிங்கள மக்களையும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய ஜனாதிபதி, ஈழக் கோரிக்கையை கைவிட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிடம் பேசியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், “நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனநாயகத்துக்கு மிகவும் அச்சுறுத்தல் மிக்க அதிகாரமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் பிரச்சினையானது.

அவ்வாறு இருக்கையில் அந்த அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சிங்கள மக்களிடம் மேலெழுந்து வருகின்றது. குறிப்பாக, இடதுசாரி அமைப்புக்கள், எதிர்க் கட்சிகள், பௌத்த மதத் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினர் நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பில் பேசி வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஈழக் கோரிக்கை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான நெருக்கடிகளைக் குறைக்க முயல்கின்றார். ஆனாலும், ஜனாதிபதியின் கூற்றுக்கள் வேடிக்கையானது” என்றுள்ளார்.

0 Responses to ஈழக் கோரிக்கைக்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு?; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com