Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் தேசிய இனமாக வாழவேண்டுமாக இருந்தால், எமது நிலத்தினை நாம் முதலில் பாதுகாக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

எமது நிலத்தினைப் பாதுகாத்தால் தான் சர்வதேசத்திடம் சென்று நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள், எங்களுக்கான தீர்வினைத் தாருங்கள் என்று கேட்கமுடியும் என்று மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.

எமது மண்ணை நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாப்பது கட்டாயமான கடமையாகும். இன்று அபிவிருத்தியினைப் பற்றி பேசுகின்றவர்கள் மண்ணைப் பற்றி சிந்திப்பதில்லை. மட்டக்களப்பில் உள்ள எல்லைக் கிராமங்கள் பெரும்பான்மை இனத்தவர்களினால் பலவந்தமாக பறிக்கப்பட்டு தன்னகப்படுத்துவற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள். நாங்கள் இதனை சும்மா பார்த்துக்கொண்டு இருப்போமானால் எமது கைகளில் இருந்து நிலம் பறிபோய்விடும் நிலம் பறிபோய்விடுமாக இருந்தால் எமது இனத்தினை பாதுகாக்கமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.

நாங்கள் தேர்தலுக்காக அரசியல் செய்பவர்கள் அல்ல. மாறாக எமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக அரசியல் செய்கின்றோம். அதன் காரணமாகத்தான் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பின்னால் நில்லுங்கள் என்று அதனை விடுத்து வேறு எந்த தேவையும் எமக்கில்லை என்று பா.அரியநேரத்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த நாட்டிலே ஜனாதிபதி தேர்தல் வரப் போகின்றது என்று கூறுகின்றார்கள், அது எப்ப வந்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எந்தத் தேர்தல் எப்ப வந்தாலும் அதனை எமது கட்சி சந்திப்பதற்கு தயாராகவே இருக்கின்றது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமெனில், எமது நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்: பா.அரியநேத்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com