அபிவிருத்திப் பணிகளில் வடக்கு மாகாண சபையினர் மத்திய அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அபிவிருத்திப் பணிகளில் அரசியல் பேதம் பார்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அரசியலும், அபிவிருத்தியும் வேறுவேறானவை. அரசியல் செய்வதற்கு வேறு வழிகளும், வேறு இடங்களும் இருக்கின்றன. மக்களுடைய நலன்சார் விடயங்களில் இரு அரசாங்கங்களும் ஒன்றிணைந்து செயலாற்றலாம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சிறந்த ஒரு கூட்டமாகும். இதில் வடக்கு மாகாண சபையினர் கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் கலந்துகொள்ளவில்லை. அது மன வருத்தத்தை தருகின்றது. மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களில் மத்திய மாகாண அரசாங்கம் என வேற்றுமை பார்க்க முடியாது. மக்களுடைய நலனில் நாம் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அபிவிருத்திப் பணிகளில் அரசியல் பேதம் பார்க்கக் கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மஹிந்த