Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களிடம் இன்று வியாழக்கிழமை கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக லயன் குடியிருப்பில் வாழ்ந்து வந்த மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவிக்கின்றது. அத்துடன், பாதிப்படைந்து நிர்க்கதியில் நிற்கும் மக்களுக்கு உதவிகள் புரிய வேண்டும். உதவி புரிவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

யாழ், கொழும்பு தமிழ் வர்த்தகர்கள் இதற்கு முன்வரவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிவதினூடாக அம்மக்களை அந்த பாதிப்புக்களில் இருந்து மீட்கமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட தமிழ் மக்கள் முன்வர வேண்டும்: கூட்டமைப்பு அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com