Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இணக்கப்பாட்டின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், பாராமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இணக்கப்பாட்டின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு நாம் அர்பணிப்புடன் செயற்படுகின்றோம். ஒன்றிணைந்த மற்றும் பிளவுபடாத இலங்கை என்ற வரையறையில் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்பு செய்கின்றோம்.

அது கௌரமான மற்றும் நியாயமான தீர்வாக இருக்க வேண்டும். அத்துடன் செயற்படுத்த முடியுமான தீர்வாகவும் அது அமைய வேண்டும். எனினும் நாம் இந்த வேளையில் கவலையுடன் ஒரு விடயத்தைக் கூற வேண்டும். நாம் எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ள போதிலும், பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் அரசாங்கம் எமது யோசனைகளுக்கு பொறுப்புடன் பதில் வழங்குவதில்லை” என்றுள்ளார்.

0 Responses to தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு அர்ப்பணிப்பாகவுள்ளோம்: த.தே.கூ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com