Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களாகிய நாம் இழப்புகளின் ரணங்களை உணர்ந்தவர்கள். பதுளை மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட எமது மலையக உறவுகளுக்கு சுகாதார உதவிகளை வழங்கிட வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சபிக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றோம். அரசியல் ரீதியாக மட்டுமன்றி இயற்கையாலும் கொடூரமாக பாதிப்பிற்குள்ளாக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வருகின்றோம். இம் மக்களின் துயரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சும், ஊவா மாகாண சுகாதார அமைச்சு ஊடாக உதவிகளை செய்ய தயாராகவுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த செயற்கை அனர்த்தத்தால் (யுத்தம்) பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். உலகையே உலுக்கிய இந்த மறக்கமுடியாத துயரச்சம்பவம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் மீண்டுமொரு இயற்கை அனர்த்தம் பதுளை மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலையிலும் ஆயிரக்கணக்காணவர்களை இழந்தோம். இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமான எமது மலையக உறவுகள் என்றுமே அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். தேர்தல் காலங்களில் மட்டும் அரவணைக்கபட்டு பின்னர் அநாதாரவாக விடப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மண்சரிவு இயற்கை அனர்த்தம் இவர்களை மேலும் கடுமையாக பாதிப்புள்ளாக்கியுள்ளது. பல நூற்றுக்கணக்கானவர்களை காவுகொண்ட இந்த பேரனர்த்தத்தால் ஏறக்குறைய ஒருகிராமமே மண்ணிற்குள் புதையுண்டுள்ளது. இழப்புகளின் ரணங்களை உணர்ந்தவர்கள் நாம். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் துயரத்தில் வடக்கு மாகாண மக்களாகிய நாம் பங்குகொள்கின்றோம். சுகாதார அமைச்சர் என்ற வகையில் ஊவா மாகாண சுகாதார அமைச்சினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ ரீதியிலான உதவிகள் வழங்க தயாராவுள்ளோம்” என்றுள்ளார்.

0 Responses to இழப்புக்களின் ரணங்களை உணர்ந்தவர்கள் நாம்; மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தயார்: ப.சத்தியலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com