இலங்கையில் பயங்கரவாதம் என்பது தொடர்ந்தும் கரிசனைக்குரிய விடயமாகவுள்ளதால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீடிப்பு அவசியமானது என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கிறதா என்பதை ஆராயும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பது தங்கள் கரிசனைகள் சரியானவை என்பதை உறுதி செய்வதாகதாக கூறியுள்ள ரவிநாத் ஆரியசிங்க, விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐ.எஸ்.(ஐ.எஸ்) அமைப்புடனும் ஒப்பிட்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீடிப்பு அவசியமானது: ரவிநாத் ஆரியசிங்க