Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அராஜக ஆட்சி புரியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை வீழ்த்துவதற்காக சகல எதிர்த்தரப்புகளுடனும் கூட்டுச் சேரத் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும், பிரதான அமைச்சர்களும் கூட தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். அரசாங்கத்தினுள் இருக்கும் கூட்டுக் கட்சிகளின் முரண்பாடான கருத்துக்களும், உறுதியற்ற வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் தோல்வியை உறுதிப்படுத்துகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நோக்கத்துக்காகவும், சுயநலனுக்காகவுமே இம்முறை ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்றார். எனவே, சட்டத்திற்கு முரணாக தேர்தலை நடத்துவதும் மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதும் அரசின் வெற்றியைப் உறுதிப்படுத்தாது.

மக்களை ஏமாற்றி - அரச உடைமைகளையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளலாம் என மஹிந்த ராஜபக்ஷ நினைப்பது வெறும் பகல் கனவே. அது இம்முறை பலிக்கப் போவதில்லை. ஜனாதிபதித் தேர்தலில் இந்த அராஜக அரசை வீழ்த்தி நாட்டைக் கட்டியெழுப்பவும் மூவின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நாம் பொது எதிரணியுடன் கைகோர்க்க ஆயத்தமாகி வருகின்றோம்” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக சகல எதிர்த்தரப்பினருடனும் இணையத் தயார்: ஜே.வி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com