Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது இனத்தின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் வாழ்வாதார மேம்பாடு மிக முக்கியமானது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழ்வாதாரத்திற்காக எவரையும் நம்பி வாழாத நிலை உருவாக்கப்படும் போதுதான் எமது சமூகம் ஒரு தலை நிமிர்ந்த சமூகமாக வாழமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமக்கென்றொரு தனித்துவம் உள்ளது. அது நாட்டின் ஏனைய இனங்களிலிருந்து வேறுபட்டது. அந்த தனித்துவம் கடந்த யுத்திற்கு முற்பட்ட காலத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஆனால், கொடிய யுத்தம் எமது மக்களின் பொருளாதாரங்களையெல்லாம் அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியதனால், கட்டிக்காத்துவந்த தனித்துவத்தையும் இனத்தின் சிறப்பம்சங்களையும் கூட இழக்க நேரிட்டது.

எனவே, யுத்தம் முடிவுற்ற நிலையிலும் நாம் கடந்த காலங்களைப்போன்று வாழ்ந்துவிட்டுபோக முடியாது. எமது இனத்தின் பெருமையையும், சிறப்பு அம்சங்களையும் மீளவும் கட்டியெழுப்ப வேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to எமது தனித்துவம் காக்கப்பட வேண்டுமாயின் வாழ்வாதார மேம்பாடு முக்கியம்: முருகேசு சந்திரகுமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com