மனித உரிமை விடயங்கள் உள்ளிட்ட இலங்கை தொடர்பிலான கொள்கைகளில் எந்தவித மாற்றங்களும், மென்மைப்போக்குகளும் இல்லை என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாடுகளில் மென்போக்கு காணப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்ற போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்திந்திருந்தார். அப்போது, இடம்பெற்ற பேச்சுக்களின் போது இலங்கை தொடர்பில் அமெரிக்கா மென்போக்குடன் அணுகுவது தெரிந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, ஊடகங்களிடம் பேசியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான ஜேன் பஷாகீ, இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேணிக்கொள்ளவே அமெரிக்க விரும்புகின்றது. எனினும், அனைத்து இன சமூகங்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய அமைதியானதும் சுபீட்சமானதுமான பின்னணியை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்று ஜேன் பஷாகீ குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உள்நாட்டு மோதல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.

0 Responses to இலங்கை தொடர்பிலான கொள்கைகளில் மாற்றமில்லை: அமெரிக்கா