சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவை அவமதித்ததுத் தொடர்பாக அவர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவை அவமதித்து, தமிழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இதற்கான ஆதாரத்தை சேகரித்து திமுக, பாமக, மனித உரிமைகள் ஆணையம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நீதி வழங்கிய நீதிபதியை அவமதித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது என்பது குறித்த விரிவான விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

0 Responses to நீதிபதி குன்ஹாவை அவமதித்ததுத் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?: சென்னை உயர் நீதிமன்றம்