Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இஸ்லாமிய தேசம் அமைப்பினரால் கடத்தப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போர்க்கள ஊடகவியலாளரான ஜோன் காண்ட்லி பேசும் புதிய வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது.

தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த ஸ்கிரிப்ட் ஒன்றை காண்ட்லி பார்த்து வாசிப்பதாக காட்சிகள் அமைந்துள்ளன. ஆனால் அந்த ஸ்கிரிப்டை தானே எழுதியாக காண்ட்லி கூறுகிறார். பிரிட்டிஷ் பிரதமர் டாவிட் கெமரூன் மற்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை அந்த வீடியோவில் கடுமையாக சாடியுள்ள காண்ட்லி,இஸ்லாமிய நாடுகள் மீது அவர்கள் தொடரும் தாக்குதல்களே இன்று எனக்கான முடிவையும் ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாமிய தேசம் அமைப்பினரின் தோற்றத்துக்கும் காரணமாகியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும்,"இஸ்லாமிய தேசம் அமைப்பினர் அமெரிக்காவுடனும், அதன் கூட்டு நாடுகளுடனும் யுத்தம் மேற்கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். பிணைக் கைதிகளை மீட்பதில் அக்கறை செலுத்தாமல், ஹாலிவூட் ஸ்டைலில் இராணுவப் படையெடுப்பை மேற்கொள்வதற்கு பெருந்தொகையான பணத்தை அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் செலவழிக்கின்றன.

எனக்கு முன்னாள் கொல்லப்பட்ட மூன்று பிணைக் கைதிகளின் நிலையும், மேற்குலக நாடுகளின் அரசியலில் மாபெரும் மாற்றத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தியிருந்தால் அது இவர்களின் வெற்றியே. மாறாக மேலும் மேலும் பெருந்தொகை பணத்தை செலவழித்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தங்களது நாடுகளின் பொருளாதார பாதையில் வீழ்ச்சி கண்டால் அதுவும் இஸ்லாமிய தேசத்தின் வெற்றியே" என அவர் கூறியுள்ளார்.

டேவிட் கெமரூண், இஸ்லாமிய தேச அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி பிணைக் கைதிகளை மீட்க முயற்சி மேற்கொள்ளாது, தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிணைக் கைதிகளின் படுகொலையை ஊதுகுழலாக்கி செயற்பட்டு வருகிறார்" எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈராக்கிலிருந்து வெளியேறி ஐந்து வருடங்களுக்குப் பிறகு, பிரிட்டனின் யோர்க்க்ஷீர் ரெஜிமெண்ட் இராணுவப் படை மீண்டும் ஈராக்கிற்கு சென்று அங்கு இஸ்லாமிய தேச இயக்கத்தினருக்கு எதிராக போரிட குர்திஷ் இனத்தவர்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

2012 இல் வட சிரியாவில் பணிபுரிந்து வந்த போது சிறைப்பிடிக்கப்பட்ட ஜோன் காண்ட்லி, இஸ்லாமிய தேசம் அமைப்பினரின் பிடியில் கைதியாக சிக்கி உயிரோடு எஞ்சியுள்ளவர்களின் முக்கியமானவர் ஆவார்.

0 Responses to ISIS பிடியில் பிணைக் கைதியாக சிக்கியிருக்கும் ஜோன் காண்ட்லியின் புதிய வீடியோ வெளியீடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com