Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கேட்டால் அது அவரது வருங்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னுதாரணமாக ஹரியானாவின் சட்டசபைத் தேர்தலுக்காக முனைப்புடன் செயற்பட்டு வரும் ஓம் பிரகாஷ் சௌத்தாலாவுக்கு நடந்த நிலைமையை இங்கு கூறலாம்.

2013 ஜனவரியில் ஓம் பிரகாஷ் சௌத்தாலாவும் அவரது 54 சகாக்களும், ஆசிரியர்கள் பணியிட வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையின் போது ஊழல் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயினும் தனது மோசமான உடல்நிலையை காரணம் காட்டி ஓம் பிரகாஷ் சௌத்தாலா கடும் முயற்சியின் பின்னர் ஜாமின் பெற்று வெளியில் வந்தார்.

ஆனால் தற்போது ஹரியானா தேர்தலுக்காக மும்முரகாம பிரச்சார நடவடிக்கையில் அவர் ஈடுபடுவதை அடையாளம் கண்டுகொண்ட நீதிமன்றம் உடனடியாக அவரது நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் தேர்தலுக்கு முன்னர் அவர் சிறைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதே போன்று ஜெயலலிதாவும் உடல்நிலையையும் வயதையும் காரணம் காட்டி ஜாமின் பெற்றால் அவர் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட முடியாத சூழல் ஏற்படும். மீறிச் செயற்பட்டால் மீண்டும் சிறைசெல்ல நேரிடலாம் என முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஓம் பிரகாஷ் சௌத்தாலாவின் நிலைமையை ஜெயலலிதாவின் நிலமையுடன் ஒப்பிட முடியாது என்றும் இருவரின் வழக்கு விசாரணைகளும் ஒன்றல்ல எனவும் முன்னாள் அரச நீதிபதி அப்துகுமார் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

0 Responses to உடல் நிலையை காரணம் காட்டி ஜெயலலிதா ஜாமின் கேட்டால் சிக்கல்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com