Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஒரு வாரத்தில் யூடியூப் இணையத்தளத்தில் மிகப் பிரபலமான வீடியோ இது. "நியூநோர்க் தெருக்களில் ஒரு பெண்ணாக 10 மணிநேரம் நடப்பீர்கள் எனில்..." எனப் பொருள்படும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இவ்வீடியோவை முதலில் பாருங்கள்.

 10 மணிநேரத்திற்குள் 100க்கு மேற்பட்ட தடவை இப்பெண் கேலி செய்யப்பட்டிருப்பதை மறைவுக் கமெரா மூலம் படம்பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஒரு இனத்தவர்கள் என்றில்லாது பல்வேறு இனத்தவர்களும் இதில் தொடர்பு பட்டிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வீதிக் கேலிகளை தடுக்கும் பொருட்டு HOLLABACK எனும் இலாபநோக்கற்ற தொண்டு நிறுவனம் ஒன்று தனக்கான பிரச்சாரத்திற்காக இவ்வீடியோவை பதிவு செய்து வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வீடியோவில் காண்பிக்கப்படுவது அமெரிக்காவின் பிரதான பெருநகர்களில் ஒன்றான நியூயோர்க் என்ற போதும், இச்சிக்கலை உலகின் அனைத்து பாகங்களிலிருந்தும் பெண்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்பதே நிஜம்.

0 Responses to நியூநோர்க் தெருக்களில் ஒரு பெண்ணாக 10 மணிநேரம்..! : இந்தவார யூடியூப் ஹிட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com