Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

1990 ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்படும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ஒருவர் அம்பாந்தோட்டை நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கே.வைரவநாதன் என்ற இவர் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் பொலிஸ் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

தேடியும் கிடைக்காத நிலையில் அவரை தேடுவதை உறவினர்கள் கைவிட்டனர்.

இந்த நிலையில் திடீரென அம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் இருந்து உறவினர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன் வைரவநாதனின் தண்டனை காலம் முடிந்து விட்டதால் அவரை வந்து அழைத்துச் செல்லுமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் அம்பாந்தோட்டை நீதிமன்றத்திற்கு சென்ற உறவினர்கள் அவரை பொறுப்பேற்றனர்.

1990 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் வைரவநாதன் சம்பந்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டதாக தெரியவருகிறது.

0 Responses to 1990ல் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழரை இன்று விடுதலை செய்த நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com