Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் நாளை போட்டி போட்டு நாடாத்தும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மலேசியாவில் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் உறவுகளைக் காப்பாற்றுவதற்காக போட்டி போட்டு செயற்பட முன்வருவார்களா?

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பாதிக்கப்பட்ட 5000 (ஐயாயிரத்துக்கு) மேற்ப்பட்ட ஈழத்தமிழர்கள் மலேசியாவிலே அகதிகளாக தஞ்சமடைந்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் மலேசியாவில் செயற்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திலே தங்களை அகதிகளாகப் பதிவு செய்து விட்டு UNHCR பாதுகாப்பின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

மலேசியா அரசாங்கம் மலேசியாவிலே அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான உடன்படிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்துடன் கையொப்பம் இடவில்லை. இதனால் மலேசியா அரசாங்கம் அகதிகளை சட்டவிரோதமான கள்ளக் குடியேறிகளாகவே கருதிவருகின்றது.

மலேசியா அரசாங்கம் அகதிகளுக்கு எவ்விதமான உதவித்திட்டங்களையும் வழங்குவதில்லை. ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் (UNHCR) எவ்விதமான உதவித்திட்டங்களையும் அகதிகளுக்கு வழங்குவதில்லை.

UNHCR அகதிகளாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பம் செய்தவர்களின் அகதி அந்தஸ்துக் கோரிக்கையை பரிசீலனை செய்யும் UNHCR அதிகாரிகள் அகதி அந்தஸ்து வழங்கத் தகுதியுடையவர்களுக்கு ஜ,நாவின் 1951ம் ஆண்டு அகதிகள் விவகார சட்டத்தின் பிரகாரம் அகதி அந்தஸ்து வழங்கி ஜ.நாவின் அகதி அந்தஸ்துப் பெற்றவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றது.UNHCR இனால் வழங்கப்படும் சிறப்பு அடையாள அட்டைக்கு மலேசியாவின் சட்டப்படி வேலை செய்ய முடியாது.

மருத்துவ சிகிச்சையை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைகளை அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்ப்பிப்பதற்கு இணைக்க முடியாது. சாதாரண அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் துன்பத்தை அனுபவித்த வண்ணமுள்ளார்கள்.

இவர்கள் தங்குமிடம், உணவு, மருத்துவம், கல்வி அடிப்படைத் தேவைகளையே தங்கள் சொந்த செலவில் தான் திருட்டுத்தனமாக வேலை செய்து நிறைவேற்றி வருகின்றனர். மலேசியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் அகதிகளை மலேசியா UNHCR புறக்கணித்து வருகின்றது.

UNHCR இனால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் தவிர்ந்த ஏனைய நாட்டு அகதிகளை மலேசியா UNHCR அமெரிக்கா உட்பட பல் வேறு நாடுகளுக்கு மீள் குடியேற்றம் செய்து வருகின்றது. ஈழத்தமிழ் அகதிகளை மட்டும் தான் மலேசியாவில் இயங்கிவரும் UNHCR மட்டும் தான் மீள் குடியேற்றம் செய்யாமல் புறக்கணித்து வருகின்றது.

எனவே மலேசியாவிலே ஈழத்தமிழ் உறவுகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையில் இருந்து அவர்களை மீட்ப்பதற்கு புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்கள் தீவிரமாகச் செயல்ப்பட வேண்டும்.

கனடா அரசாங்கம் 2015ம் ஆண்டு 3 லட்சம் அகதிகளை கனடா நாட்டிலே குடியேற்ற உள்ளது.

கனடாவில் செயற்படும் தமிழ் அமைப்புக்களும் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போன்றோர் கனடா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி மலேசியாவிலே ஐ.நாவினால் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளை ஐ.நா ஊடாக கனடா நாட்டிலே குடியேற்றுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மலேசியா வாழ் ஈழத்தமிழ் அகதிகள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

புலம்பெயர் அமைப்புக்களின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

நன்றி
மலேசியா வாழ் ஈழத்தமிழ் அகதிகள்





0 Responses to மலேசியாவில் அல்லலுறும் ஈழத்தமிழ் அகதிகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com