Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை விடுத்த இலங்கையர்கள் 37 பேரை கடலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களை இலங்கையிடம் திரும்பவும் கையளித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் அலுவலம் உறுதிசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி (நவம்பர்) கொக்கோஸ் தீவுக்கு வடக்கே நடுக்கடலில் தடுக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 38 பேரிடமும் கடலில் வைத்தே புகலிடக் கோரிக்கை விசாரணைகள் செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைக்காக ஒருவரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறியதற்காக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட 37 பேரும் விசாரிக்கப்படுகிறார்கள் என இலங்கை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

கடலில் வைத்தே புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புகின்ற அவுஸ்திரேலியாவின் நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இந்த 37 பேரையும் அவுஸ்திரேலியா அதேவகையில் கையைாண்டமை தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை அமைப்பின் விக்னேஸ்வரனும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

0 Responses to புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேரை கடலில் வைத்தே திரும்பவும் இலங்கையிடம் கையளித்தது ஆஸி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com