ஆளும் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை உன்னிப்பாக அவதானித்து ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவரப்பட்டு முடிவெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்களுடன் சில தினங்களில் தொகுதி ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கட்சியின் தலைமை தொடர்ந்து பேச்சுகளை நடத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த- மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவு: த.தே.கூ