கூட்டணியில் இருந்து வெளியேறும்படி கூற சுப்பிரமணிய சுவாமிக்கு தகுதி இல்லை. என்னைப்பற்றி எச்.ராஜா கூறியது நகைப்புக்குரியது. எச்.ராஜா கட்சியில் பெயர் வாங்குவதற்காக இப்படி பேசியுள்ளார் என மதிமுக செயலர் வைகோ தெரிவித்தார்.
நாகர்கோவிலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
என்னைப்பற்றி எச்.ராஜா கூறியது நகைப்புக்குரியது. எச்.ராஜா கட்சியில் பெயர் வாங்குவதற்காக இப்படி பேசியுள்ளார்.
கூட்டணியில் இருந்து வெளியேறும்படி கூற சுப்பிரமணிய சுவாமிக்கு தகுதி இல்லை. எச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக ம.தி.மு.க.வினர் செயல்படக்கூடாது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால் நேரில் சந்திக்கும் போது என்னிடம் அன்பும், மரியாதையும் காட்டினார்.
நேற்று தானே உங்களை விமர்சனம் செய்தேன் என்று கூறும் போது உங்கள் கொள்கைக்காக நீங்கள் போராடுகிறீர்கள். அதற்காக தானே பேசினீர்கள் என்று கூறுவார்.
எம்.ஜி.ஆரை பற்றி கொள்கை ரீதியாக விமர்சனம் செய்த போது அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தவில்லை.
தி.மு.க.வில் இருந்து வெளியேறிய போது கருணாநிதியை கொள்கை ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்த போதும் இப்படி யாரும் கூறவில்லை.
எனவே எச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக போராட்டம் நடத்தவோ, உருவப்பொம்மை எரிக்கவோ கூடாது என்று ம.தி.மு.க.வினரிடம் ஏற்கனவே நான் கடுமையாக கூறி இருக்கிறேன்.
என்னை யாரும் அச்சுறுத்த முடியாது என்று கூறினார் வைகோ.

0 Responses to என்னை வெளியேறும்படி கூற சுவாமிக்கு தகுதி இல்லை!: வைகோ