அரியானா மாநிலம், ரோதக்கில் பேருந்து ஒன்றில் ஈவ்டீசிங்கில் ஈடுபட்ட 3 இளைஞர்களுக்கு சகோதரிகளான இளம்பெண்கள் இரண்டு பேர், சரமாரியாக தர்மஅடி கொடுத்த காட்சிகள் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு வெளியாகி உள்ளன.
பி.எஸ்.சி., படிக்கும் இரு சகோதரிகளும், கடந்த வெள்ளிக்கிழமை தங்களின் கிராமத்தில் இருந்து ரோதக்திற்கு பேருந்து ஒன்றில் பயணம் செய்தனர். இவர்களுடன் இதே பேருந்தில் பயணித்த இளைஞர்கள் 3 பேர் கிண்டல் செய்ததோடு, சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளனர். பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த சகோதரிகள் இருவரும், ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட அந்த இளைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். சகோதரிகளில் ஒருவர், தன்னுடைய பெல்ட் மூலமும் தாக்கினார்.
பஸ்சில் நடந்த சம்பவம் தொடர்பாக சகோதரிகள் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சகோதரிகளில் ஒருவர் கூறுகையில், பேருந்தில் நாங்கள் பயணம் செய்த போது, மூன்று பேரும் துண்டுச்சீட்டில் எண்களை எழுதி எங்கள் மீது வீசினர். இதற்கு எனது சகோதரி எதிர்ப்பு தெரிவித்த போது, அவர்கள் எங்களை அவதூறாக பேச துவங்கினர். மேலும் மோசமாக எங்களை திட்டினர். இதனால் பொறுமையிழந்து அவர்களை நான் தாக்கினேன். மூன்று பேரில் ஒருவர் எனது சகோதரியின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டான். மற்றொருவன், எனது கழுத்தை பிடித்து நெறித்தான். இதனால் எனது சகோதரி பெல்ட் மூலம் தாக்க துவங்கினார். இதன் பின்னர், மூன்று பேரும் எங்களை பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் எங்களுக்கு பலத்த காயமடைந்தது என கூறினார். இந்த சம்பவம் நடந்த போது, பஸ்சில் பயணித்த மற்ற பயணிகள், எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக சகோதரிகள் கூறியுள்ளனர்.

0 Responses to ஈவ்டீசிங் செய்த 3 இளைஞர்களுக்கு தர்ம அடி! ஓடும் பேருந்தில் பொங்கி எழுந்த சகோதரிகள்!