இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் குழந்தைகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இலங்கை கடற்படையால் 2011 நவம்பர் மாதம் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர் தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், பிரசாந்த்.
இந்த ஐந்து பேர் மீதும் போதை மருந்து கடத்தல் வழக்குக்கு தேவையான ஆவணங்களை உருவாக்கி குற்றவாளி கூண்டில் நிறுத்தியது இலங்கை.
இதைத்தொடர்ந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து, கடந்த மாதம் 30ம் திகதி இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் தமிழகமே கொந்தளிப்புக்கு உள்ளானது. மீனவர்களின் குடும்பங்கள் நிலை குலைந்தன. இதில் சோகம் என்னவென்றால், எமர்சன் மற்றும் பிரசாந்த் ஆகிய இரு மீனவர்களும் தம்முடைய மனைவிமார் கர்ப்பமாக இருக்கும்போது கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் குழந்தைகள் பிறந்தன. இதனால் தந்தையின் முகத்தை கூட அந்த இரு குழந்தைகளும் இதுவரை பார்த்தது கிடையாது.
போனில் பேசும்போது மட்டுமே குரலை கேட்டுள்ளன. இதுதான் உங்கள் தந்தை என்று தாய்மார்கள் புகைப்படதை காண்பித்ததை பார்த்துதான் அக்குழந்தைகள் வளர்ந்துள்ளன.
இந்நிலையில்தான், இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக இலங்கை அதிபர் ராஜபக்சே ஐந்து மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஐந்து மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் ஐவரும் இன்று திருச்சிக்கு விமானம் மூலம் வருவார்கள் என்ற தகவல் வெளியானது.
இதனால் ராமேஸ்வரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த அந்த மீனவர்கள் குடும்பத்தினர் இன்று அதிகாலை 3 மணிக்கெல்லாம் திருச்சி கிளம்பி சென்றனர்.
தங்களது தந்தையை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு மீனவர்களின் பிள்ளைகளும் சென்றனர்.

0 Responses to முதல் முறையாக தந்தை முகம் பார்க்கும் மீனவர் குழந்தைகள்: நெஞ்சை நெகிழவைக்கும் தகவல்