Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழ் மக்களிடையே எந்தவித பிளவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆனால், தமது உரிமைகளை அடைவது தொடர்பில் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு நேற்று புதன்கிழமை வழங்கிய செவ்வியொன்றிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தனி ஈழம் தான் தீர்வு என்று நம்பும் தமிழ் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதுபோல, இலங்கை அரசாங்கங்களுடன் ஒன்றிப்போய் எவ்வளவு சலுகைகளைப் பெற்று மக்களின் முன்னேற்றம் தொடர்பில் சிந்திக்க முடியும் என்று வலியுறுத்தும் (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட) சில தரப்பினரும் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரையும் விட ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கத்துடன் தமிழ் மக்கள் வாழ வேண்டும். அவ்வாறான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இயங்கும் எம்மைப் போன்ற பெருமளவான மக்களும் இருக்கின்றார்கள்.

ஆக, ஈழத் தமிழ் மக்களிடையே பிளவு என்பதெல்லாம் கிடையாது. மாறாக தமது உரிமைகளை அடையும் வழிமுறைகள் தொடர்பில் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்” என்றுள்ளார்.


0 Responses to தமிழ் மக்களிடையே பிளவு இல்லை; எண்ணங்களில் சில வேறுபாடுகள் உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com