கீதையின் பிரபலமான ஒரு மேற்கோள் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பது ஆகும். ஆனால் இந்தியா என்ற பெரீய நிலப்பரப்பின் மத்திய ஆட்சி எமது உரிமைப் போராட்டம் மீது எதனை நடத்தியதோ அதனையே நன்றாக இன்னும் தொடர்ந்து நடத்துகின்றது என்பதே நாம் பார்த்துவரும் யதார்த்தம் ஆகும்.
அங்கு ஆட்சிக் கதிரையில் அமரும் ஆட்கள் மாறினாலும் கூட,ஆட்சிக் கட்டிலில் அமருபவர்களின் தோள் துண்டுகளின் நிறம் மாறினாலும் கூட ஏறத்தாழ ஒரே விதமான நிலைப்பாடே எமது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் மீது கையாளப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றது.
மிகமிக அண்மைய கேவலம் என்னவென்றால் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களில் முன்னோடியான அநகாரிக தர்மபாலாவுக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முத்திரை ஒன்றை இந்திய அரசின் சார்பில் வெளியிட்டார் என்பதே.
இந்திய பெருநிலத்தின் மத்திய ஆட்சி உமிழ்நீரை தமிழ்நாட்டு மக்கள் அனைவரது நெற்றியில் பூசி அதன் மீது ஒட்டிய முத்திரை இது. இதனைவிட வேறு என்ன அவமானம் வேண்டும். இது அதிர்ச்சியாகவும் திகைப்பாகவும் தோன்றலாம்.
ஆனால் இதில் அதிர்ச்சியடையவோ திகைக்கவோ எதுவுமே இல்லை. ஏனெனில் இது ஒன்றும் திடீரென நடாத்தப்பட்ட ஒரு சம்பவமே அல்ல. மிக நீண்ட வரலாறு கொண்ட ஒரு பாரபட்சமான வெளியுறவு கொள்கை ஒன்றின் நீட்சி அல்லது தொடர்ச்சிதான் இது.
இந்தியாவின் ஒருமைப்பாடு என்ற பதத்தின் மீது ரோ அமைப்பு வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த வெளியுறவுக் கொள்கை நடாத்தப்பட்டு வருகின்றது.
எப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் மிதவாதிகளின் கைகளை மீறி தியாகம் நிறைந்த இளைஞரின் போராட்டமாக, மக்கள் போராட்டமாக மாறியதோ அந்நாளில் இருந்தே இந்த அணுகுமுறையே மேற்கொள்ளப்படுகின்றது.
ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தியில் இருந்து இன்றைய மோடி வரைக்கும் இதுவே தொடர்கதையாக தொடர்கிறது. இதில் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படவே வேண்டும். அது என்னவென்றால் 'இந்திராகாந்தி இருந்திருந்தால் தமிழீழத்தை எடுத்து தந்திருப்பார்' என்ற கருத்து ஒன்று நிலவுகின்றது. அது முழுக்கவே கலப்பில்லாத கற்பனை.
இந்திரா காந்தி காலத்தில் உலகம் இரண்டு அணிகளாக நின்றிருந்ததும் அதில் ஒரு அணியில் அவரது தந்தையும் இந்தியாவின் முதலாவது பிரதமருமான ஜவகர்லால் நேரு இணைந்திருந்ததால் இந்திராவும் அதிலேயே தொடர்ந்ததும் அதில் ஒரு அணியாகிய அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையுடன் நெருங்குவதை தடுப்பதற்காகவும் அதேநேரம் இலங்கைக்கு ஒருவிதமான மென்அழுத்தம் (கவனிக்க,மென் அழுத்தம் மட்டுமே) கொடுத்து அதனை எந்த பக்கமும் ஒரேயடியாக சாயந்து விடாமல் வைத்திருக்கவுமே ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி என்ற வலை வீசப்பட்டது..
இந்திரா காந்தியின் செயலரான ஜி.பார்த்தசாரதியை வெளிப்படையான தொடர்பாளராக வைத்து அமைப்புகளை கையாண்டபடியே இந்தியபாதுகாப்பு தொடர்பான கொள்கை வகுப்பாளர்கள் ஏற்படுத்திய நிகழ்ச்சிநிரலின்படி
(1) அமைப்புகளுக்கு பயிற்சி
(2) எல்லா அமைப்புகளையும் ஒரே அளவில் வளர்த்தல்,
(3) ஒரு கட்டத்தில் இங்கு அழுத்தம் கொடுத்து அங்கு அனுப்பி வைத்தல்,
(4) அங்கு ஆயுதக்குழுக்களின் மோதல் நிலமாக வட-கிழக்கு மாறும் அதே நேரத்தில் சிறீலங்கா மீது அழுத்தம் கொடுத்து தனது வழிக்கு கொண்டுவருதல் என்பதுதான் அந்த நிகழ்ச்சிநிரல்.
இதற்கிடையில் தமிழ் போராட்ட குழுக்களின் தலைமைகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி தனி தமிழீழம் ஒருபோதும் சாத்தியம் அல்ல என்று கருத்துருவாக்கம் விதைக்கவும் செய்யப்பட்டது.
எல்லா இயக்கங்களையும் ஒரே பலத்துடன் வளர்த்து தமிழீழத்தில் இறக்கிவிட்டு தமிழீழத்தை இன்னொரு லெபனான் ( அந்த நேரத்து லெபனான், இப்போது சிரியா) ஆக மாற்றி அதற்குள்ளாக அரசியல் செய்யும் இந்திய கனவுக்கு இடைஞ்சலாக இருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், அதன் போரிடும் வலுவும், உறுதியுமே.
மட்டுப்படுத்தப்பட்ட வழங்கல்களுடனேயே வைத்திருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு இப்படி தாக்குதல்களை வெற்றிகரமாக செய்து சிங்களத்தை முகாம்களுக்குள் முடக்குகிறார்கள் என்பதில் இந்திய மத்திய அரசு பெரிய விசனத்துள்ளும் அதிர்ச்சிக்குள்ளும் இருந்தது.
இந்திய புலனாய்வு நினைப்புக்கு மாறாக அதிகமான தாக்குதல்களை செய்ததற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதேனும் புதிய ஆயுதங்களை பயன்படுத்தியது பற்றி தெரிய வந்தால் அது எப்படி உங்கள் கைகளுக்கு வந்தது வந்தது என்ற கேள்வி உடனடியாக ரோ அமைப்பால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தொடுக்கப்பட்டே வந்துள்ளது.
ஆனால் அந்த ஆயுதங்கள் சிங்கள படைகளிடம் இருந்து கைப்பற்றபட்டவை என்பதே தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலாகவும் இருந்து வந்தது.
இந்திய மத்திய அரசின் கட்டி அணைத்தபடியே நெஞ்சுக்குள் ஆழமாக கத்தியை சொருகும் அணுகுமுறையை ஆரம்பத்திலேயே இனங்கண்டுகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மாற்று ஏற்பாடுகளை மிக இரகசியமாக ஆனால் மிகமிக உறுதியான பின்னணியுடன் செய்ய ஆரம்பித்தது.
அதற்கு உறுதுணையாக தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நின்றிருந்தார். அவருக்கு மக்கள் மத்தியில் இருந்து அசைக்க முடியாத ஆதரவும், பலமும் மிகமிக பெரிய காரணிகள்.
நாடுகளில் உள்ள வேற்று நாட்டு தூதுவர்களை சம்மன் கொடுத்து அழைத்து விளக்கம் கேட்பதுபோல தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமானவர்கள் அடிக்கடி இவ்வாறு ரோ அலுவலகத்துக்கு விளக்கம் கேட்க, அதிருப்தியை தெரியப்படுத்த, ஆட்சேபம் தெரிவிக்க ஏன் சிலவேளைகளில் மிரட்டப்படவும் என்று அழைக்கப்பட்ட நாட்கள் அதிகம்.
(கேணல் சங்கர் அண்ணா போன்றவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் மிகநுட்பமாக இதனை கையாண்டார்கள் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்)
தமிழீழ தாயகம் என்ற எண்ணக்கருவை,விடுதலை இலட்சியத்தை அழித்துவிடும் இந்திய நிகழ்ச்சி நிரல் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுதிமிகு, வீரமிக்க தலைமையால் சீர்குலைந்துபோனதை அடுத்து இந்தியா நேரடியான தலையீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.
இந்திய சதிகளை பற்றி எழுத தொடங்கினால் ஒரு நீண்ட புத்தகமாக முடியும். நமது பிரச்சினை இப்போ அதுவல்ல. ஏன் இந்த இந்தியா அப்போதில் இருந்து இன்று வரைக்கும் தொடர்ந்து எம் போராட்டத்தை கறுவறுக்கும் வேலையை செய்கின்றது..?
இந்தியா என்ற பெருநிலப்பரப்பின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட சிறீலங்கா அரசு என்ன நினைக்கிறது என்பதில் இந்திய மத்திய அரசின் கரிசனையும், ஆதங்கமும் அதிகமாக இருப்பது ஏன்..? என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அல்லது புரிந்தால் எமது பயணத்தின் சுமை குறையும்.
பாதையில் உள்ள தடையின் பரிமாணம் புரிந்து கொண்டாலே பயணம் சாத்தியமாகும். இல்லையா. எந்தவொரு அடிப்படையும் இல்லாத பெரிய ஒரு பயம் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு இருந்து வருவதே முதலாவது காரணமாகும்.
அந்த பயம் என்னவெனில், தமிழீழம் சுதந்திர நாடாக ஆகினால் தமிழ்நாடு மாநிலமும் இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் போராட்டத்தை ஆரம்பித்துவிடும்.
ஏற்கனவே இந்தியாவின் வடமுனையில் காஸ்மீரம், மணிப்பூர், நாகலாந்து, அசாம், மிசோரம், மாவோயிஸ்டுகள் என்று ஆயுதம் ஏந்திய போராட்டம் முனைப்பெடுத்து நிற்கையில் கீழ் முனையிலும் தென்பகுதியில் தமிழ்நாடும் போராட்டத்தை ஆரம்பித்தால் சோவியத் யூனியன் சிதறியது போல இந்தியாவும் உடைந்துவிடும் என்ற பயம் அது.
சர்தார் வல்லபாய் பட்டேல் மிகவும் சிரமப்பட்டு ஒன்றாக்கிய இந்த இந்திய நிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் போராட்டம் சிதறடித்து விடும் என்ற பயம்.
தேசிய இனங்களின் ஒருங்கிணைவு என்ற அத்திவாரத்தில் எழுப்பப்படாத இந்த இந்தியா என்ற நிலப்பரப்பு
மக்கள் மனதில் பதிந்துவிட்ட இதிகாசங்களினாலும் (மகாபாரதம்,ராமாயணம்), மதரீதியான நினைப்புகளாலும், மட்டுமே ஒரு தேசம் என்று செதுக்கப்பட்டுள்ளது.
தேசிய இனங்களின் எழுச்சியானது இந்த ஒற்றை தேசம் என்ற கருத்தை உடைத்து இந்தியாவை துண்டுதுண்டான பல தேசங்களாக ஆக்கிவிடும் என்ற பயமும், பதட்டமும் விடுதலை அடைந்த நாளில் இருந்தே இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு இருக்கிறது.
அதன் ஒரு வெளிப்பாடுதான் தமிழீழத்துக்கு எதிரான நிலைப்பாடு. சிங்கள தேசத்தை வருடிவிடும் நிலைப்பாடு. சிங்கள ஆட்சிகளை கடுமையாக எதிர்க்காத மென்போக்கு.
ஒரு தேசிய இனம் எழுச்சி கொள்ளவும், தனது சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தவும் வேண்டிய வரலாற்று போக்கு என்பது இன்னொரு தேசிய இனத்துடன் ஒருபோதும் ஒப்பீடு செய்யமுடியாதது என்ற மிகச்சின்ன விடயத்தையே புரிந்து கொள்ள மாட்டாத இந்த கொள்கை வகுப்பாளர்களின் பிழையான புரிதல்தான் தமிழீழம் பற்றிய கடும்போக்குக்கு முக்கிய காரணம்.
இந்த பயம் ஒரு ஆதாரமற்றது என்பதை பல தடவைகள் தமிழீழ மக்களின் தேசிய விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பிட்டும்கூட டெல்லி சவுத்பிளக் அதனை விளங்கி கொள்ளவே இல்லை.
அப்படி அவர்கள் விளங்கிக் கொள்ள தொடர்ந்து மறுப்பதற்கு இன்னொரு காரணம். ஒட்டுமொத்தமாகவே தமிழர்கள் முழுவரின் மீதும் ஒரு ஏளனப்போக்கு, ஒரு வெறுப்புதான் காரணம்.
இன்னொரு முக்கிய காரணம்.ஆரியர் என்ற ஒரு நினைப்பு. இப்போது நாம் அநகாரிக தர்மபாலாவுக்கு முத்திரை வெளியிட்ட இடத்துக்கு வந்துவிட்டோம். ஆம், இந்த ஆரியசிந்தனையை மிக உரத்து கூறிய இனவெறியர்களில் முதன்மையானவர் இந்த அநகாரிக தர்மபாலாதான்.
சிங்களவர்கள் மிகவும் சுத்தமான ஆரிய இரத்தம் என்று வெறி ஏற்றி போதனை செய்த அநகாரிக தர்மபாலாவின் வழித்தடத்தில்தான் மற்'றைய சிங்களத் தலைவர்களும் தங்களை தாமே ஆரிய சிங்கங்கள் என்று கர்ஜனை செய்தார்கள்.
சிங்களத் தலைவர்கள் டெல்லிக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நீங்களும் நாங்களும் ஒரே இரத்தம் என்ற பாசத்தை மீண்டும் உறுதிபடுத்தி வர தவறுவதே இல்லை.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இதனில் ஒருபடி மேலேயே போய் 'இந்திரா காந்தியின் மூக்கும் தன்னுடைய மூக்கும் ஒரே அமைப்பு' என்று ஆரிய மூக்குக்கு காப்புரிமை பெறும் கதைகள் நேரடியாகவே சொல்லியதும் இதன் தொடர்ச்சியேதான்.
என்னதான் தமிழ்நாட்டு தமிழர்களை இந்திய கடற்பரப்பினுள் வைத்து சிங்களம் சுட்டுகொன்று குருதி சிதற வைத்தாலும்கூட சிங்களத்தை கட்டி அணைத்து இந்தியா தழுவுவதற்கு இதுதான் முக்கிய காரணம்.
இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தின் பலநூறு சதுர மைல்களை ஆக்கிரமித்து நிற்கும் சீனாவுடன் கூட இந்தியா தோளில் கைபோட்டு தோழமை கொள்ளும், கொள்ளுகிறது ( இந்தியாவினுள் மாற்றங்களை உருவாக்க நினைத்த இரண்டு இந்திய பிரதமர்கள் முதலில் விஜயம் செய்தது சீனாவுக்கு தான். சீனாவுடனான இந்திய வர்த்தகம் இன்று 73பில்லியம் டாலர்..)
தனது குடிமக்களை கொன்று குவிக்கும் சிங்களத்தைக்கூட இந்தியா செல்லப்பிள்ளையாக குலாவும்.
ஆனால் தமிழர்களை, அது ஈழத்தமிழனாக இருந்தால் என்ன இந்தியத் தமிழனாக இருந்தால் என்ன இந்திய ஆளும் தரப்பு ஒருபோதும் மனிதர்களாகவே நினைக்காது என்பதே உண்மை.
அந்த நினைப்பின் ஒரு வெளிப்பாடுதான் அநகாரிக தர்மபாலாவுக்கு முத்திரை வெளியீடு.
சுப்ரமணியன் சுவாமியின் ருவிற்றர்தான் இப்போது இந்திய வெளியுறவு கொள்கையை அறிவிக்கும் முதல் இடமாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். நாம் விழித்துக் கொள்ளாதவரை..
-ச.ச.முத்து
ilamparavai@hotmail.com

0 Responses to எது நடந்ததோ அதுவே தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றது... ஒருவித மாற்றமும் இல்லாமல் - ச.ச.முத்து